states

img

கேரள அரசின் பண்டிகைக்கால அரிசி விநியோகத்திற்கு அனுமதி... தேர்தல் ஆணைய தடையை நீக்கி உயர்நீதிமன்றம் உத்தரவு...

திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் பல்வேறு பண்டிகைகளை முன்னிட்டு முன்னுரிமை அல்லாத நீலநிற மற்றும் வெள்ளை நிற குடும்ப அட்டைகளுக்கும் மானிய விலை அரிசி மற்றும்உணவுப் பொருள் தொகுப்பு வழங்கும் திட்டத்தை பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசுசெயல்படுத்தி வருகிறது. 

இதற்கு நடத்தை விதிமுறைகளைக் காரணம் காட்டி தேர்தல் ஆணையம் அண்மையில் தடை விதித்திருந்தது. முன்னுரிமை அல்லாத குடும்ப அட்டைகளுக்கான அரிசி விநியோகத் திட்டத்தை நிறுத்தி வைத்தும் உத்தரவு பிறப்பித்தது.ஏழை மக்களின் நலன் சார்ந்த பிரச்சனைஎன்பதால், கேரள அரசு இப்பிரச்சனையை உயா் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றது. அரிசி விநியோகத்திற்குதடை விதித்த தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்தது.
இந்த மனு திங்களன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “ஈஸ்டா், விஷு, ரமலான்போன்ற பண்டிகைகளை மனதில் கொண்டேமுன்னுரிமை அல்லாத குடும்ப அட்டைதாரர்களுக்கும் மானிய விலை அரிசி வழங்க மாநில அரசு முடிவுசெய்தது.

மேலும்,இந்த திட்டம் மாநில சட்டப்பேரவையில் கடந்த ஜனவரியில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டு, அதற்கான உத்தரவை கடந்த பிப்ரவரி 4-ஆம் தேதியே மாநில அரசு பிறப்பித்து விட்டது. எனவே, இதை மாநில அரசின் தன்னிச்சையான முடிவாக கருத முடியாது; அதற்கு தடை விதிப்பதும் சரியாக இருக்காது” என்று கேரள அரசின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதங்களை எடுத்து வைத்தார். இதையடுத்து, கேரள அரசின் வாதங் களை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், மாநில அரசின் அரிசி விநியோக திட்டத்துக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

;