states

img

விவசாயிகளின் நலன்களிலும் முதலிடத்தில் கேரளம்... ஓய்வூதியமாக வழங்கியது ரூ.1830 கோடி..

திருவனந்தபுரம்:
விவசாயிகளுக்கு உதவும் திட்டங்களைசெயல்படுத்துவதில் கேரளா முதலிடத்தில் உள்ளது. பயிர்கள், மானியங்கள், விவசாயிகளின் நலன் மற்றும் காப்பீட்டுக்கான ஏற்பாடுகளை உறுதி செய்வதில் கேரளா நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது என்பதை எல்டிஎப் அரசாங்கத்தின் பல்வேறு திட்டங்கள் நிரூபிக்கின்றன. நாட்டில் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதும், போர்க்களத்திலும் உயிரிழக்கும் போதும்  கேரளம்  தற்கொலை செய்ய வேண்டிய அவசியமில்லாத மாநிலமாக  மாற்றப்பட்டுள்ளது.

உழவர் நல வாரியம்
நாட்டிலேயே உழவர் நல வாரியத்தை அமல்படுத்திய முதல் மாநிலம் கேரளம். உழவர் நல வாரியம் நடைமுறைக்கு வந்ததால், 60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் ஓய்வூதியமாக மாதம் ரூ.3000 முதல் ரூ.5000 வரை கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு அதிக ஓய்வூதியம் வழங்குவதற்காக தற்போதுள்ள உழவர் ஓய்வூதிய திட்டத்தை புதிய நல வாரியத்துடன் இணைக்க விரிவான திட்டம் தயாரிக்கப்படுகிறது.

நெல்லுக்கு அதிக விலை
நாட்டிலேயே அதிக ஆதரவு விலையில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யும் மாநிலம் கேரளமாகும். மத்திய கொள்முதல் விலை ரூ.18.15 ஆக உள்ளபோது, கேரளம் ரூ.27.48 வழங்குகிறது. கேரளத்தில் முதன்முறையாக நெல்வயல்களைப் பாதுகாக்கும் விவசாயிகளுக்கு ரூ .2000 ராயல்டி அறிவிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளது.

கடன் நிவாரண ஆணையம்
உழவர் கடன் நிவாரண ஆணையம் உள்ள ஒரே மாநிலம் கேரளம். கடன்களை திருப்பிச் செலுத்த முடியாத குடும்பங்களுக்கு கேரளத்தின் விவசாய கடன் நிவாரண ஆணையம் ஆறுதலளித்து வருகிறது. உழவர் தற்கொலைகளைத் தடுப்பதில் ஆணை யத்தின் பணி முக்கியப்பங்கு வகிக்கிறது

ரப்பர் விவசாயிகளுக்கு ஆதரவு
மத்திய அரசின் ரப்பர் இறக்குமதி கொள்கையின் விளைவாக, ரப்பர் விவசாயிகள் திணறியபோது உற்பத்தி ஊக்கத்தொகை மூலம் ஒரு கிலோ ரப்பருக்கு குறைந்தபட்ச விலை ரூ.150 கிடைப்பதை கேரள அரசு உறுதி செய்துள்ளது.மாநிலத்தில் உள்ள காய்கறி விவசாயிகளின் உற்பத்திக்கு நியாயமான விலையை உறுதி செய்வதற்காக 16 வகையான காய்கறிகளுக்கு ஆதார விலையை அரசாங்கம் நிர்ணயித்துள்ளது.பிரதமரின் பசல் பீமா யோஜனாவுக்கான பிரீமியத்தில் 50 சதவிகிதம் கேரள அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. 26 வகையான விவசாய பயிர்களுக்கான மாநில பயிர் காப்பீட்டுத்திட்டமும் பயனாளிகளுக்காக செயல்படுத்தப்படுகிறது. விவசாயிகள் இரு திட்டங்களி லும் சேரவும், இரண்டின் நன்மைகளை பெறவும் அரசாங்கம் அனுமதித்தது.கேரளத்தில், 2,56,855 விவசாயிகளுக்கு தலா ரூ.1,400 ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இது ஜனவரி முதல் ரூ.1,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. யுடிஎப் ஆட்சியின் போது ரூ.500 ஆக மட்டும்  இருந்த ஓய்வூதியம் கூட நிலுவையில் இருந்தது. எல்டிஎப்அரசு, ஓய்வூதிய நிலுவையை வழங்கியதுடன் மூன்று மடங்காக ஓய்வூதியத்தை அதிகரித்தது. விவசாயிகளின் ஓய்வூதியத்திற்கு இதுவரை ரூ.1830 கோடி வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 தருவதாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், கேரள அரசு விவசாயிகளுக்கு ரூ.18,000 தருகிறது.

;