உருவ கேலி குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பள்ளி பாடத்திட்டத்தில் அதனை ஒரு பாடமாக சேர்க்கவுள்ளதாக அம்மாநில கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி தெரிவித்துள்ளார்.
கேரள கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி முகநூல் பதிவில், தனது புகைப்படத்தைப் பார்த்த ஒருவர் தொப்பையைக் குறைக்குமாறு கூறியுள்ளார். அதற்கு, உருவ கேலி செய்வது தவறான செயல் என்று அவருக்கு பதில் அளித்ததாகத் தெரிவித்தார். இந்நிலையில், உருவ கேலி குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பள்ளி பாடத்திட்டத்தில் அதனை ஒரு பாடமாக சேர்க்கவுள்ளதாக சிவன்குட்டி தெரிவித்துள்ளார்.
மேலும், உருவ கேலி செய்வது தவறான செயல் என்றும், இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மன உலைச்சலுக்கு ஆளாகின்றனர் என்றும், உருவ கேலி செய்வதை நாம் நிறுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், அத்தகைய விழிப்புணர்வை எவ்வாறு கல்விப் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக மாற்றுவது என்பதையும், ஆசிரியர்களின் பயிற்சித் திட்டங்களின் போது இதுபோன்ற சூழ்நிலைகளை எவ்வாறு கையாள்வது என்பதையும் நாம் விவாதிப்போம் என்றும் சிவன்குட்டி தெரிவித்துள்ளார்.