states

img

தனியார்மயமாக்கலுக்கு எதிராக ஒருங்கிணைந்த போராட்டம்.... தொழிற்சங்கங்களுக்கு எளமரம் கரீம் எம்.பி., அறைகூவல்....

கொச்சி:
நாட்டின் பொதுத்துறை உட்பட அடிப்படையான  நிறுவனங்களை பெரும் முதலாளிகளுக்கு மத்திய அரசு வேகமாக வழங்கி வரும் நிலையில், அதிகரித்து வரும்   தனியார்மயத்துக்கு எதிராக ஒருங்கிணைந்த போராட்டத்திற்கு தயாராக வேண்டும் என்று அனைத்து தொழிற்சங்கங்களுக்கு சிஐடியு கேரள மாநில பொதுச் செயலாளர் எளமரம் கரீம் எம்.பி. அழைப்பு விடுத்துள்ளார்.மக்கள் விரோத வங்கி சீர்திருத்தங்களுக்கு எதிராக இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் கேரள மாநிலக் குழு முன்னெடுத்துள்ள பிரச்சாரத்தைத் ஞாயிறன்று எளமரம் கரீம் தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் மேலும் பேசியதாவது: 

அண்மையில், நிலக்கரித்துறை, ஆயுத தளவாட தொழிற்சாலை, கிழக்கு உத்தரப்பிரதேசத்தில் மின் துறை ஆகியவற்றில் தொழிலாளர்கள் மேற்கொண்ட ஒருங்கிணைந்த போராட்டம் தனியார்மயமாக்கல் செயல்முறையை ஓரளவிற்கு நிறுத்தியுள்ளது.இரண்டு பொதுத்துறை வங்கிகள் விரைவில் தனியார் மயமாக்கப்படும் என்று நிதியமைச்சர் ஏற்கனவே பட்ஜெட்டில் அறிவித்துள்ளார். பெரிய நிறுவனங்களுக்கு வங்கி உரிமங்களை வழங்கும் நடவடிக்கையில் இந்திய ரிசர்வ் வங்கியும் ஈடுபட்டுஉள்ளது. 2008-ஆம் ஆண்டின் உலகளாவிய நிதி நெருக்கடி இந்திய நிதித் துறையை பெரிய அளவில் பாதிக்கவில்லை. அதற்கு பொதுத்துறை வங்கிகள்தான் காரணம் என்று அப்போதைய நிதியமைச்சர் கூறியதை இந்த நேரத்தில் அதிகாரிகள் நினைவில் கொள்ள வேண்டும்.இவ்வாறு எளமரம் கரீம் பேசினார்.

ஐஎன்டியுசி மாநில பொதுச் செயலாளர் வி.ஜே. ஜோசப், பிஎம்எஸ் அகில இந்திய செயலாளர்வி. ராதாகிருஷ்ணன், டிஒய்எப்ஐ மத்தியக்குழு உறுப்பினர் நிதின் கனிச்சேரி, ஏஐஒய்எப் மாநில இணைச் செயலாளர் என். அருண் மற்றும் இளைஞர் காங்கிரஸ் மாநிலக்குழு உறுப்பினர் ஜோசப் மார்ட்டின் ஆகியோரும், இந்தப் பிரச்சார இயக்கத்தில் காணொலி வாயிலாக உரையாற்றினர்.

;