india

img

விற்பனை மேலாளர்களாக மாறும் மோடியின் அமைச்சரவை சகாக்கள்.... எளமரம் கரீம் எம்.பி. விமர்சனம்...

புதுதில்லி:
மோடி அரசாங்கத்தில் பல அமைச்சர்கள், விற்பனை மேலாளர்களைப் போலவே செயல்படுகிறார்கள் என்று சிபிஎம் மாநிலங்களவை தலைவர் எளமரம் கரீம் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில், ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு எதிராக புதனன்றுஅவர் பேசினார். அரசு,பொதுத்துறை நிறுவனங்களையும் அவற்றின் சொத்துக்களையும் விற்பனை செய்கிறது. இது நாட்டை அழிக் கும் என்று கரீம் கூறினார். மக்களின் கவலைகள் ஜனாதிபதியின் உரையில் பிரதிபலிக்கவில்லை. வேலையின்மை நாடு எதிர்கொள்ளும் மிகப் பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது. கோவிட் காலத்தில், ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் மட்டும் 1.5 கோடி மக்கள்வேலை இழந்தனர். பெட்ரோலிய பொருட்களின் உயரும்விலைகள் வாழ்க்கைச் செலவை உயர்த்துவதோடு மக்களை மேலும் பரிதாபத் திற்குள்ளாக்குகின்றன. ஊட் டச்சத்து குறைபாடு மக்கள் தொகையில், குறிப்பாக குழந்தைகள் மத்தியில் ஒரு கடுமையான பிரச்சனையாக மாறி வருவதாக தேசிய குடும்பசுகாதார ஆய்வு காட்டுகிறது.

பெண்கள் மற்றும் தலித்துகளுக்கு எதிரான வன்முறை அதிகரித்து வருகிறது. இது சிவில் உரிமைகள் மற்றும் ஜனநாயக சுதந்திரங்களை மறுக்கிறது. நாடாளுமன்ற நடைமுறைகள் மற்றும் விதிகளைத் தவிர்த்து, அரசாங்கம்நிறைவேற்றிய விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் பல மாதங்களாக போராடி வருகின்றனர். விவசாயிகளை மோசமானவர் களாக சித்தரித்து போராட் டத்தை அடக்குவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. கார்ப்பரேட்டுகளை மகிழ் வித்து வகுப்புவாத நிகழ்ச்சி நிரலை செயல்படுத்த அரசாங்கம் விரும்புகிறது. ஜனாதிபதியின் உரை இதையெல் லாம் மறைக்கும் முயற்சியாகும் என்றார்.

;