திருவனந்தபுரம்,மார்ச் 1- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கேரள முத லமைச்சர் பினராயி விஜயன் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள் ளார். திமுக தலைவரும், முதலமைச்ச ருமான மு.க.ஸ்டாலின் 70 ஆவது பிறந்தநாள் மார்ச் 1 அன்று கொண்டாடப் பட்டது. ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறினர். இதில் கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில், ‘அன்புள்ள தோழர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள்.கேரளா -தமிழ்நாடு பிணைப்புகளை வலுப்படுத்த உங்கள் முயற்சிகள் பெரிதும் பாராட்டப்படுகின்றன.கூட்டாட்சி, மதச்சார்பின்மை மற்றும் நமது தாய்மொழிகளின் பாது காப்பில் நின்று, நாடு முழுவதும் உள்ள இதயங்களை வென்றுள் ளீர்கள், மகிழ்ச்சி, நலம், வெற்றி கிடைக்க உங்களுக்கு வாழ்த்துக்கள்!’ என்று தெரி வித்துள்ளார்.
நன்றி தெரிவிப்பு
பிறந்தநாள் வாழ்த்துக் கூறிய கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள் ளார். அதில் அவர், தென்னிந்தியாவில் இருந்து பாசிச சக்திகளை என்றென்றும் அகற்றி நிறுத்த நாம் ஒன்றுபட்டு செயல்படுவோம் என குறிப்பிட்டுள்ளார்.