states

img

நடிகர் திலீப் மீதான சதி வழக்கு இயக்குநர்கள் ரஃபி, அருண் கோபியிடம் விசாரணை

கொச்சி, ஜன.25- நடிகை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப் பட்ட வழக்கை விசாரித்த அதிகாரிகளுக்கு ஆபத்து ஏற்ப டுத்த சதித் திட்டம் தீட்டிய வழக்கில், திரைப்பட இயக்கு நர்கள் ரஃபி, அருண் கோபி ஆகியோர் களமசேரியில் உள்ள குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு வரவழைத்து வாக்குமூலம் பெறப்பட்டது. திலீப்புக்கு சொந்தமான திரைப்பட தயாரிப்பு நிறு வனமான கிராண்ட் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் மேலா ளர் மற்றும் மூன்று பணியாளர்கள் குற்றப்பிரிவு அலுவ லகத்திற்கு வரவழைக்கப்பட்டு தகவல் சேகரிக்கப்பட் டது. குற்றப்பிரிவு எஸ்.பி மோகனச்சந்திரன் செய்தி யாளர்களிடம் கூறுகையில், திலீப்பின் குரல் பதிவு மற்றும்  பிற விவரங்களை அடையாளம் காண ரஃபி அழைக்கப் பட்டதாக கூறினார். இந்த வழக்கில் முக்கிய தகவல்களை  வெளியிட்ட இயக்குநர், பாலச்சந்திர குமாருக்கும் திலீப்பு க்கும் இடையேயான நிதி பரிமாற்றங்கள் குறித்து ரஃபி யிடம் இருந்து தகவல்களை சேகரிக்கப்பட்டது. திலீப்பை  வைத்து பாலச்சந்திர குமார் இயக்கவிருந்த ‘பிக் பாக்கெட்’ படத்துக்கு ரஃபி வசனம் எழுதினார்.

செய்தியாளர்களிடம் ரஃபி கூறுகையில், பாலச் சந்திர குமார் தான் தன்னை தெலைபேசியில் தொடர்பு கொண்டு திலீப் தொடர்பான படத்திலிருந்து விலகுவ தாக கூறினார். இதை ஒரு வருடத்திற்கு முன்பே கூறி யிருந்தார். அதற்கான காரணத்தை அவர் தெரிவிக்க வில்லை. பாலச்சந்திர குமார் படத்தின் வசனத்தை என்னிடம் கொடுத்திருந்தார். படம் தாமதமானதால் பாலச் சந்திரகுமார் வருத்தப்பட்டார். இதில் முன்விரோதம் கொண்டதாக நினைக்கவில்லை. படத்தை கார்னிவல் என்ற நிறுவனம் தயாரிக்க இருந்தது. அவர்களே தயாரிக்கும் இன்னொரு படமும்  உள்ளது. முதலில் அதன் வசனத்தை எழுதச் சொன்னார்.  இது முழுக்க முழுக்க கிராபிக்ஸ் திரைப்படம், எனவே  இதற்கான தயாரிப்புக்கு ஒரு வருடம் ஆகும். அதனால் தான் திலீப்பின் ‘பிக் பாக்கெட்’ திட்டம் தள்ளிப்போய் புதிய படத்துக்கு வசனம் எழுத ஆரம்பித்தேன். இந்தப்  படத்தில் திலீப் எதிர்மறையான பாத்திரத்தில் நடிக்க  வேண்டியிருந்தது. இதனால் திலீப் வருத்தப்பட வில்லை என்றும், சுவாரசியமான கதை என்றும் ரஃபி  கூறினார்.

;