states

img

‘35 சீட் கிடைத்தால் பாஜக ஆட்சி அமைக்கும்’ என்னும் சுரேந்திரனின் அறிக்கையே பின்னடைவுக்கு காரணமாம்... பாஜக தேர்தல் ஆய்வு அறிக்கையில் கண்டுபிடிப்பு....

திருவனந்தபுரம்:
‘35 இடங்கள் கிடைத்தால் போதும் கேரளத்தில் ஆட்சி அமைப்போம்’ என்று கே.சுரேந்திரன் கூறியது பாஜகவுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது என்று தேர்தல் தோல்வியை ஆய்வு செய்த குழு தெரிவித்துள்ளது.

ராஜகோபாலின் அறிக்கைகள் நேமத்திலும் மற்ற இடங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தியது. அவரால் மக்கள் விரும்பும் சட்டமன்ற உறுப்பினராக உயர முடியவில்லை என்றும் அறிக்கையில் கூட்டிக்காட்டப்பட்டுள்ளது. தலைமையின் தோல்விகளை கோடிட்டுக் காட்டும் இந்த அறிக்கை, அடுத்த வாரம் உயர்மட்ட குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. நான்கு பொதுச் செயலாளர்கள் மற்றும் ஒரு துணைத் தலைவர் அடங்கிய குழு தோல்விக்கான காரணத்தை ஆய்வு செய்தது. கே.சுரேந்திரன் இரண்டு இடங்களில் போட்டியிட்டார். ஆனால் தோல்வியடைந்தார். நேமம் கேரளத்தின் குஜராத் என்கிற கும்மனம் ராஜசேகரனின் கூற்றுக்கும் பதிலடி கிடைத்துள்ளது. கழக்கூட்டத்தில், சோபா சுரேந்திரனின் வேட்புமனு பொருத்தமற்றது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

;