states

img

பில்கிஸ் பானு வழக்கு: 11 குற்றவாளிகளின் விடுதலை உத்தரவைத் திரும்பப்பெற வலியுறுத்தி 6000 பேர் கையெழுத்திட்டு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்

2008இல் குஜராத்தில் முஸ்லீம்களுக்கு எதிராக நடைபெற்ற மதவெறி வன்முறை வெறியாட்டங்களின்போது, 5 மாதக் கர்ப்பிணியான  21 வயது இளம்பெண் பில்கிஸ் பானுவை  கூட்டு வன்புணர்வுக்கு உள்ளாக்கியும், அவருடைய 3 வயது உடைய சிறுமி உட்பட 14 பேரைப் படுகொலைகள் புரிந்தும் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த கயவர்களைத் தற்போது விடுதலை செய்துள்ள உத்தரவைத் திரும்பப்பெற வலியுறுத்தி, சமூகச் செயற்பாட்டாளர்கள், புகழ்பெற்ற எழுத்தாளர்கள், வரலாற்றாசிரியர்கள், திரைப்படத் தயாரிப்பாளர்கள், இதழாளர்கள், முன்னாள் அரசு அதிகாரிகள் உட்பட ஆறாயிரம் பேர் கையெழுத்திட்டு, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்கள். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், இவ்வாறு கூட்டு வன்புணர்வுக் குற்றத்திற்காகவும், கூட்டாகப் பல கொலைகளைச் செய்த குற்றத்திற்காகவும் தண்டிக்கப்பட்ட 11 பேர் விடுதலை செய்யப்பட்டிருப்பது, இந்த அமைப்பின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் பாலியல் வன்புணர்வுக்குப் உள்ளானவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.

சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர்களின் தண்டனைகளை ரத்து செய்து குஜராத் அரசாங்கம் உத்தரவு பிறப்பித்ததைத் தொடர்ந்து கோத்ரா கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டார்கள். 2022 ஆகஸ்ட் 22 அன்று காலை, பிரதமர் நரேந்திர மோடி, தன்னுடைய சுதந்திர தின உரையின்போது, பெண்களின் உரிமைகள் குறித்தும், அவர்களின் கண்ணியம் மற்றும் ‘பெண்களின் சக்தி’ (‘Nari Shakti’) குறித்தும் உரை நிகழ்த்தினார். அவ்வாறு அவர் உரை நிகழ்த்திய அன்றையதினமே, அன்று மாலையே தன்னுடைய மூன்று வயது மகளைக் கூட்டாகக் கொன்றும், தன்னைக் கூட்டு வன்புணர்வுக்கு உள்ளாக்கிய கயவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுவிட்டதை பில்கிஸ் பானு அறிந்துகொண்டதாக, கூட்டு அறிக்கையில் கையெழுத்திட்டிருக்கிறவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

இவ்வாறு கூட்டுப் பாலியல் வன்புணர்வு மற்றும் கொலைகள் புரிந்த 11 பேரும் தண்டனை குறைக்கப்பட்டு, விடுதலை செய்யப்பட்டிருப்பது, இந்த அமைப்பின்மீதும், நீதித்துறை மீதும் நம்பிக்கை வைத்திருக்கும் பாலியல் குற்றத்திற்குப் பலியானவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

இதில் மிகவும் முக்கியமான அம்சம் என்னவென்றால், மத்தியக் குற்றப்புலனாய்வுக் கழகம் விசாரணை செய்த ஒரு வழக்கில், தண்டனை பெற்றவர்களுக்கு ஒன்றிய அரசாங்கம் ஒப்புதல் இல்லாமல் சம்பந்தப்பட்ட மாநில அரசு தண்டனையைக் கழித்து விடுதலை செய்ய முடியாது. ஆனால் இந்த வழக்கில் ஒன்றிய அரசும் ஒப்புதல் அளித்திருக்கிறது. இது எந்த அளவிற்கு ஒன்றிய அரசாங்கம் ‘பெண்களின் சக்தி’ (‘Nari Shakti’) மீது மரியாதை(?) வைத்திருக்கிறது என்பதையும், பெண்களின் உரிமைகள் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைத்திட பாடுபடும் என்பதையும் வெளிப்படுத்துகிறது என்றும் அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.  

எனவே, இவ்வாறு பெண்களுக்கு எதிராக மாபெரும் அநீதி இழைக்கப்பட்டிருப்பதை உச்சநீதிமன்றம் சரிசெய்திட முன்வர வேண்டும் என்றும் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

(

;