states

img

முதல்வர்கள் அளவில் விவாதம்; நம்பிக்கையுடன் கர்நாடகம் மங்களூரு வரை சில்வர் லைன் திட்டத்தை நீட்டிக்க வாய்ப்பு

மங்களூரு, செப். 5- ரயில்வே மேம்பாடு குறித்து கேரளா வும் கர்நாடகாவும் நடத்த முடிவு செய்த முதல்வர் அளவிலான விவாதத்தை கர்நாடகா எதிர்பார்க்கிறது. தலச்சேரி - மைசூரு, நிலம்பூர் - நஞ்சன்கோடு ரயில் பாதை மேம்பாட்டுடன், உத்தேச சில்வர் லைன் திட்டத்தை மங்களூரு வரை நீட்டிப்பது குறித்து ஆலோசிக்கப்படுவது மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது. திருவனந்தபுரத்தில் நடைபெற்ற தென்னிந்திய முதல்வர்கள் கவுன்சில் கூட்டத்தில், ரயில்வே மேம்பாடு தொடர் பாக இரு மாநில முதல்வர்கள் சந்திப்புக்கு உடன்பாடு ஏற்பட்டது. திருவனந்தபுரம்--காசர்கோட்டில் இருந்து நான்கு மணி நேரம் மட்டுமே பயணிக்கும் சில்வர் லைன் மங்களூருக்கு நீட்டிக்கப்படுவதால், வணிகம் மற்றும் சுற்றுலாத் துறையில் மிகப்பெரிய வளர்ச்சி ஏற்படும். இத்திட்டம் நிறைவேறினால், கேரளாவில் இருந்து கோவா, மும்பை போன்ற நகரங்களுக்குச் சென்று திரும்பும் நேரம் வெகுவாகக் குறையும்.
எழுச்சி, வளர்ச்சியின் முழக்கம்
கர்நாடகா மற்றும் கேரளாவை இணை க்கும் ரயில் பாதை இரு மாநிலங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். மங்களூருவில் இருந்து திருவனந்தபுரத்திற்கு குறைந்த கட்டண சரக்கு மற்றும் குறுகிய நேர பயணம் சாத்தியமாகும். தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவை இணைக்கும் விரை வுச்சாலை குறித்தும் ஆலோசிக்கப்படு கிறது. இதன் மூலம் தென்னிந்தியாவின்  மூன்று முக்கிய மாநிலங்களுக்கிடையே யான வர்த்தகம் மற்றும் கலாச்சார உற வுகள் அதிகரிக்கும்.

;