states

img

ஒடிசா ரயில் விபத்து: சங்பரிவாரத்தினரின் வெறுப்பு அரசியல் அம்பலம்!

சென்னை, ஜூன் 4- ஒடிசாவில் இருந்து சென்னைக்கு ஞாயிறன்று (ஜூன் 4) சிறப்பு ரயிலில்  வந்த பயணிகளிடம் அமைச் சர்கள் கே.கே.எஸ்.ஆர்.ராம சந்திரன், மா.சுப்பிரமணியம் ஆகியோர் நலம் விசாரித்த னர். பின்னர் சென்னையில் உள்ள மாநில கட்டுப்பாட்டு  அறையில், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச் சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ஒடிசா வில் நிகழ்ந்த விபத்தில் பாதிக்கப்பட்ட பயணிகள், 200 பேர் சிறப்பு ரயில் மூலம் அதிகாலை 4.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். இவர்களுக்கு தேவை யான மருத்துவ உதவி களைச் செய்திருக்கிறோம். வருவாய்த்துறை சார்பில் வந்தவர்களுக்கு உணவு, குடிநீர் வழங்கப்பட்டது. மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் மருத்துவர்கள், செவிலியர்கள் மருத்துவ உபகரணங்களுடன் தயார் நிலையில் வந்திருந்தனர். பத்துக்கும் மேற்பட்ட ஆம்புலன்சுகள், அரசு  பேருந்துகள், கட்டண மில்லா டாக்சி என அனைத் தும் தயார் நிலையில் ஏற்பாடு செய்திருந்தோம். சென்னை வந்த பயணி களில் 29 பயணிகளுக்கு மட்டும் மருத்துவப் பரிசோ தனை மேற்கொள்ளப் பட்டது. ரயில் விபத்தில் காய மடைந்திருந்த 4 பேர்  ராஜீவ்காந்தி மருத்துவ மனையில் சிகிச்சையளிக் கப்பட்டது. அதில் 3 பேர்  சிகிச்சை பெற்று திரும்பி விட்டனர். ஒருவர் மட்டும் மருத்துவமனையில் உள் நோயாளியாக இருக்கிறார்.

மொத்தம் 1,091 பேர்  ரயில் விபத்தில் சிக்கியிருக் கிறார்கள். இதில் 275 பேர் இறந்துள்ளதாக தகவல் கூறப்பட்டுள்ளது. 56 பேருக்கு பலத்த காயமும், 747 பேருக்கு சாதாரண காய மும் ஏற்பட்டுள்ளதாக தெரி விக்கப்பட்டுள்ளது. இறந்த வர்களில் 70 பேர் அடையா ளம் காணப்பட்டுள்ளனர். அந்த 70 பேரில் தமிழகத் தைச் சேர்ந்தவர்கள் யாரும் இல்லை என்பதை, தமிழ்நாட்டில் இருந்து சென் றுள்ள அமைச்சர்கள், அதிகாரிகள் தெரிவித்துள்ள னர். இந்நிலையில், கோர மண்டல் விரைவு ரயிலில்  பயணம் செய்ய முன்பதிவு செய்த பயணிகளது பட்டி யல் தெற்கு ரயில்வேயி லிருந்து பெறப்பட்டு, அதில்  தமிழ்ப் பெயர் கொண்ட வர்களையும், தமிழ்நாட்டில் இருப்பிட முகவரி அளித்துள்ள 127 நபர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவர்களிடம் தொடர்பு கொள்ளப்பட்டதில் 119 பேர் பாதுகாப்பாக இருப்பது தெரிய வந்துள்ளது. எஞ்சிய 8 பேரை நாங்கள் தொலைபேசி வழியாக தொடர்பு  கொள்ள முயற்சித்தோம் அதில் கோவையைச் சேர்ந்த கோபி, சென்னையைச் சேர்ந்த ஜெகதீசன் ஆகிய இருவரும் பத்திரமாக ஊர் திரும்பியுள்ளதும், கமல் என்பவர் விபத்துக்குள் ளான ரயிலில் பயணம் செய்யவில்லை என்பதும் தெரியவந்தது. இந்த தகவல் சக பயணிகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. எஞ்சிய 5 பேரின் முக வரிகளை ரயில்வே துறையி டம் இருந்து பெற்று, அதற் கான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளோம். ஒடிசா வில் இருந்து சென்னைக்கு  திங்களன்று ஒரு சிறப்பு  ரயிலும், செவ்வாயன்றும் ஒரு ரயிலும்வரவிருக்கிறது.  ஒடிசாவில் விபத்துக் குள்ளான ரயிலில் தமிழ் நாட்டைச் சேர்ந்த 128  பயணிகள்தான் முன்பதிவு செய்து வந்துள்ளனர். அரசி டம் உள்ள தகவல்களின்படி, தமிழ்நாட்டைச் சேர்ந்த வர்களை தேடி வருகிறோம் என்றும் அவர் கூறினார்.

தொடர்பு கொள்ள முடியாத  தமிழர்கள் விவரம்

 ஹவுராவிலிருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்த பயணிகளது பட்டியல் தெற்கு ரயில்வேயிலிருந்து பெறப்பட்டு, அதில் தமிழ்ப் பெயர் கொண்டவர்களையும், தமிழ்நாட்டில் இருப்பிட முகவரி அளித்துள்ள 127 நபர்களிடம் தொடர்பு கொள்ளப்பட்டதில், 119 நபர்கள் பாதுகாப்பாக இருப்பது தெரிய வந்துள்ளது. இதுவரை சேகரிக்கப்பட்ட விபரத்தின் அடிப்படையில் தொடர்புகொள்ள இயலாத நிலையில் உள்ள நாரகானி கோபி (34), கார்த்திக் (19), ரகுநாத் (21), கமல் (26), அருண் (21), ஜெகதீசன் (47), மீனா (66), கல்பனா (19) ஆகியோரது உறவினர்கள், நண்பர்கள் இவர்கள் குறித்த தகவல் அறிந்திருப்பின், மாநில அவசரகால செயல்பாட்டு மைய எண்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

;