states

img

3-வது நாளாக தர்ணா நடத்திய கேதார்நாத் கோயில் அர்ச்சகர்கள்.... தேவஸ்தான வாரியத்தை கலைக்க வேண்டுமாம்...

டேராடூன்:
உத்தரகண்ட் மாநிலத்தில் புகழ்பெற்ற பத்ரிநாத், கேதார் நாத், யமுனோத்ரி, கங்கோத்ரி உள்ளிட்ட 51 கோயில்களின் நிர்வாகங்களை அரசாங்கமே நிர்வகிக்கும் என்று அம்மாநில பாஜக அரசு கடந்த ஆண்டு முடிவெடுத்தது. 

அப்போதைய முதல்வர் திரிவேந்திர சிங் ராவத், இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார்.இதுதொடர்பான மசோதாவையும் அவர் சட்டப்பேரவையில் நிறைவேற்றினார். ஆளுநர் பேபி ராணி மவுரியாவின் ஒப்புதலும் பெறப்பட்டது. அரசு அறநிலையக் கட்டுப் பாட்டிலுள்ள கோயில்களை எல்லாம், அந்த மதங்களைச் சேர்ந்தஅமைப்புகளிடம் ஒப்படைத்துவிட வேண்டும் என்பதுதான் பாஜகவின் நெடுநாளைய கோரிக்கையாகும். அப்படியிருக்க, உத்தரகண்டில் 51 கோயில்களை, அம்மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத், அரசாங்கத்தின் கட்டுப் பாட்டில் கொண்டுவந்தது முக்கியமானதாக பார்க்கப்பட்டது. 

ஆனால், இதற்கு எதிராக போராட்டங்களும் அங்கே துவங்கின. அர்ச்சகர்கள் அந்தந்தகோயில்களில் போராட்டங் களை நடத்தினர். ஒரு சிலர் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் அறிவித்துப் பயமுறுத்தினர். இதனிடையே, பாஜக திரிவேந்திர சிங் ராவத்தை நீக்கிவிட்டு, தீரத் சிங் ராவத்தை புதியமுதல்வராக கொண்டுவந்த நிலையில், உத்தரகண்ட் மாநிலத்தில், கோடிக்கணக்கில் காணிக்கை கொட்டும் 51 கோயில்களையும், அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்து மீண்டும் அர்ச்சகர்களிடமே ஒப்படைப்பதாக அறிவித்தார்.

எனினும், ‘சார் தாம்’ புனிதத்தலங்கள் என்று அழைக்கப் படும் பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்திரி ஆகிய 4 கோயில்களுக்கான தேவஸ்தான மேலாண்மை வாரியத்தை கலைக்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்று கூறப்படுகிறது.இதையடுத்து, அங்குள்ள அர்ச்சகர்கள் கேதார்நாத் கோயில் 3 நாட்களாக தர்ணாபோராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வாரியத்தைக் கலைக்கும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்றும் அர்ச்சகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

;