திரிணாமுல் கட்சியின் முன்னணி தலைவரான சுவேந்து அதிகாரி, கடந்தமாதம் பாஜக-வில் இணைந்தார். கூடவே 7 எம்எல்ஏ-க்களையும் அவர்கூட்டிச் சென்றார். இந்நிலையில், அரிந்தம் பட்டாச் சார்யா என்ற மற்றொரு திரிணாமுல் கட்சி எம்எல்ஏ-வும் பாஜக-வில் கரைந்துள்ளார். இத்துடன் மம்தா கட்சியிலிருந்து 15 எம்எல்ஏ-க்கள் பாஜக-வுக்கு ஓடியுள்ளனர்.