உத்தரகண்ட்,நவம்பர்.04- உத்தரகண்ட்டில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 22 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டத்தில் நைனி டண்டாவிலிருந்து ராம் நகருக்கு 40 பயணிகளுடன் சென்ற பேருந்து மலைச்சரிவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 15 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22ஆக உயர்ந்துள்ளது.
காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்