சென்னை,அக்.02- இன்று தமிழ்நாடு முழுவதும் கிராம சபை கூட்டங்கள் நடைபெறவுள்ளன.
அக்டோபர் 2, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இந்த ஆண்டுக்கான 5ஆவது கிராம சபை கூட்டம் இன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு நிகழ்ச்சிக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை வழங்கியுள்ளது. கிராம சபை கூட்டங்களை நம்ம கிராம சபை செயலி மூலம் பதிவேற்றம் செய்யத் தமிழ்நாடு அரசு அறிவுத்தியதோடு, ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதிச் செலவினம் குறித்து விவாதிக்கவும் அறிவுறுத்தியுள்ளது.