states

img

பாலியல் புகார்: கர்நாடக பாஜக எம்எல்ஏ முனிரத்னா கைது

பாஜக எம்எல்ஏ முனிரத்னா பாலியல் வன்கொடுமை செய்ததை வீடியோ எடுத்து வைத்து மிரட்டி வருவதாக காவல்நிலையத்தில் பெண் ஒருவர் புகாரளித்ததை தொடர்ந்து பாஜக எம்எல்ஏ கைது செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடக மாநிலத்தின் முன்னாள் அமைச்சரும், ராஜராஜேஸ்வரி நகர் தொகுதி பாஜக எம்எல்ஏ.வுமான முனிரத்னா மீது பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டுவதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில் கடந்த 2020ஆம் ஆண்டு கக்கலிபுரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு தனியார் விடுதியில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக தெரிவித்துள்ளார். அதில், விஜயகுமார், சுதாகரா, கிரண்குமார், லோஹித் கவுடா, மஞ்சுநாத் மற்றும் லோகி ஆகிய 6 பேருடன் முனிரத்னா பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோக்களாக எடுத்து வைத்து மிரட்டுவதாக தெரிவித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில், முனிரத்னா மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த ஒரே வாரத்தில் முனிரத்னா மீது சுமத்தப்பட்டுள்ள 3-ஆவது புகார் இதுவாகும்.

இதனையடுத்து, பாலியல் துன்புறுத்தல் மற்றும் குற்றவியல் மிரட்டல் வழக்குகளில் முனிரத்னாவை இன்று போலீசார் கைது செய்துள்ளனர்.முன்னதாக மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்ட எம்எல்ஏ முனிரத்னா நிபந்தனை ஜாமீனில் நேற்று தான் வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.