கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா(92) இன்று காலமானார்.
கடந்த 1999 முதல் 2004-ஆம் ஆண்டு வரை கர்நாடக முதலமைச்சராக பதவி வகித்தவர் எஸ்.எம்.கிருஷ்ணா. இதனைத்தொடர்ந்து 2004 முதல் 2008 ஆம் வரை மகாராஷ்டிரா மாநிலத்தின் ஆளுநராகவும், 2009 முதல் 2012 வரை வெளியுறவுத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர் எஸ்.எம்.கிருஷ்ணா.
உடல்நலக் குறைவால் சிகிச்சை எடுத்து வந்த எஸ்.எம்.கிருஷ்ணா(92) பெங்களூரில் இன்று காலமானார்.