states

img

குஜராத்: சுவர் இடிந்து விழுந்ததில் 9 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

குஜராத் மாநிலத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் 9 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
குஜராத்தின் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள காடியில் தனியார் கட்டுமான தளம் ஒன்றில், சுவர் இடிந்து விழுந்ததில் 9 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். ஒருவர் படுகாயமடைந்துள்ளார். மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. 
பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து (PMNRF) இருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவருக்கு ரூ.50,000மும் நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.