மிரட்டும் குளிர் ஜம்மு-காஷ்மீரில் பள்ளி வேலை நேரம் மாற்றம்'
கடும் குளிர் காரணமாக ஜம்மு -காஷ்மீர் பள்ளத்தாக்கு முழு வதும் பள்ளிகள் செயல்படும் நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக யூனி யன் பிரதேச பள்ளிக் கல்வி இயக்குநர கம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக காஷ்மீர் பள்ளிக் கல்வி இயக்குநரகம் பிறப்பித்த உத்தர வில், “பள்ளத்தாக்கில் குளிர்காலம் தொடங்கியதைத் தொடர்ந்து, பள்ளி நேரங்களில் பருவகால மாற்றத்தின் ஒரு பகுதியாக அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நவம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளத்தாக்கு முழு வதும் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பள்ளிகள் செயல்படும். அதே போன்று ஸ்ரீநகர் நகராட்சி எல்லைக்கு வெளியே உள்ள பள்ளிகளுக்கு, காலை 10:30 மணி முதல் பிற்பகல் 3:30 மணி வரை செயல்படும்” என அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும், திருத்தப்பட்ட நேரங்களை எந்தவித மாறுதலும் இல்லா மல் கண்டிப்பாக அனைத்து கல்வி நிறு வனங்களும் கடைப்பிடிக்குமாறு கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது. குளிர்காலத்திற்கு முன் ஸ்ரீநகர் நகராட்சி எல்லைக்குள் உள்ள பள்ளி களுக்கான நேரங்கள் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலும், வெளியே உள்ள பள்ளிகள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் செயல்பட்டன.
 
                                    