states

img

அரசியலமைப்பு என்ற வார்த்தைக்கு அஞ்சி நடுங்கும் ஆர்எஸ்எஸ், பாஜக

அரசியலமைப்பு என்ற வார்த்தைக்கு அஞ்சி நடுங்கும் ஆர்எஸ்எஸ், பாஜக'

“ஜனநாயக உரிமைகள்” கருத்தரங்கை ரத்து செய்து தில்லி பல்கலை., நிர்வாகம் அடாவடி

புதுதில்லி தில்லியில் பாஜக ஆட்சி அமைந்தவுடன் கல்வி நிறு வனங்களில் பல்வேறு மாற்றங் கள் ஏற்பட்டு வருகின்றன. குறிப் பாக மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தில்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் மீது ஏபிவிபி (ஆர் எஸ்எஸ் மாணவர் அமைப்பு) தாக்குதல், வாக்குத் திருட்டு மூல மாக மாணவர் சங்க தேர்தலில் ஏபிவிபி வெற்றி என பல்வேறு அடாவடி சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.    இந்நிலையில், தில்லி பல்கலை கழகத்தில் நீண்ட காலம் தொடர்ச்சி யாக நடைபெற்று வரும் “ஜன நாயக, அரசியலமைப்பு உரிமை கள்” கருத்தரங்கு திடீரென ரத்து செய்யபட்டுள்ளது கடும் சர்ச்சை யை ஏற்படுத்தியுள்ளது. தில்லி பல்கலைக்கழகத்தின் ஒரு அங்க மான தில்லி ஸ்கூல் ஆப் எகனா மிக்ஸ் (DSE) அரங்கில் நடைபெறும் மிக நீண்ட கால நிகழ்வுகளில் ஒன் றான “நிலம், சொத்து மற்றும் ஜனநாயக மற்றும் அரசியலமைப்பு உரிமைகள்” கருத்தரங்கு அக்., 31 (வெள்ளிக்கிழமை) அன்று நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. சமூகவியல் துறை சார்பில் நடைபெற இருந்த இந்த கருத்தர ங்கில் பிரபல பேச்சாளரும், கொள்கை ஆராய்ச்சி மையத்தின் மூத்த உறுப்பினருமான டாக்டர் நமிதா வாஹி “ஜனநாயகம், அரசி யலமைப்பு மாற்றங்கள் மற்றும் சொத்துரிமை” குறித்த நீதிமன்ற விளக்கங்கள் குறித்து உரையாற்ற இருந்தார். ஆனால் வியாழக்கிழ மை அன்று திடீரென தில்லி பல்க லைக்கழக பதிவாளர் விகாஷ் குப்தா சமூகவியல் துறைத் தலை வர் அனுஜா அகர்வாலுக்கு வாட்ஸ்  அப் மூலம், “காலை வணக்கம் மேடம். நிர்வாகக் காரணங்களால் 2025 அக்டோபர் 31 வெள்ளிக்கிழ மை திட்டமிடப்பட்டிருந்த கருத்த ரங்கு நிகழ்ச்சித் திட்டத்தை ரத்து செய்யவும். அதன்படி ரத்து நட வடிக்கை எடுத்ததற்கான அறிக்கை யும் உடனடியாக சமர்ப்பிக்கப்பட வேண்டும். நன்றி. விகாஷ்” என  குறிப்பிடப்பட்டு இருந்தது. பதிவா ளர் விகாஷ் குப்தாவின் இந்த  உத்தரவுக்கு தில்லி பல்கலைக்கழ கத்தில் மட்டுமின்றி நாடு முழு வதும் உள்ள அனைத்து கல்வி யாளர்கள் அதிர்ச்சியையும், கடும் கண்டனத்தையும் வெளிப்படுத்தி யுள்ளனர். கலந்துரையாடல் ஒருங்கிணைப்பாளர் ராஜினாமா இந்நிலையில், கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளரும், தில்லி ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் பிரிவின் பேராசிரியருமான, சமூகவிய லாளர் நந்தினி சுந்தரம்,”கடைசி நிமி டத்தில் கருத்தரங்கு தன்னிச்சை யாக ரத்து செய்யப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. ரத்து செய்யப்பட்ட தற்கான காரணங்கள் எழுத்துப் பூர்வமாகவோ அல்லது வேறுவித மாகவோ தெரிவிக்கப்படவில்லை. சமூக ஆராய்ச்சிக் கலந்துரை யாடலின் அறிவுசார் ஒருமைப் பாட்டை நான் இனி உத்தரவாதம் செய்ய முடியாது. அதனால் கருத்த ரங்கு ஒருங்கிணைப்பாளர் பதவி யை நான் ராஜினாமா செய்கிறேன். ஆர்எஸ்எஸ் தலைமையிலான அரசாங்கங்கள் நிலம் மற்றும் ஜனநாயக உரிமைகள் பற்றிய எந்தவொரு விவாதத்திற்கும் பயப் படுகிறது என்பதை நாம் ஊகிக்க மட்டுமே முடியும்” என அவர் கூறினார். ஓடி ஒளியும் பல்கலைக்கழக நிர்வாகம் ஜனநாயக உரிமைகள் கருத்த ரங்கை ரத்து செய்தது தொடர்பாக “தி வயர்” இணையதள செய்தி நிறுவனம், தில்லி பல்கலைக்கழக துணைவேந்தர் யு.எஸ்.சிங், பதி வாளர் விகாஷ் குப்தா, மனிதநேயம் சமூக அறிவியல் ஆய்வுத்துறை தலைவர் உஜ்வல் சிங்,  சமூக வியல் துறைத் தலைவர்  அனுஜா அகர்வால் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளது. கருத்த ரங்கு ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் என்ன என கூறுமாறு கடிதத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டி ருந்தது. ஆனால் பல்கலைக்கழக நிர்வாகம் காரணம் ஏதும் கூற வில்லை.