states

img

கொரோனாவால் இறந்த 20 லட்சம் பேரின் குடும்பங்களுக்கும் இழப்பீடு வழங்குக!

கொரோனாவால் இறந்த 20 லட்சம் பேரின் குடும்பங்களுக்கும் இழப்பீடு வழங்குக!

சிபிஎம் எம்.பி.  ஜான் பிரிட்டாஸ் கடிதம்

கொரோனாவில் இறந்தோர் பட்டி யலில் விடுபட்ட 20 லட்சம் பேரின் குடும்பங்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும்  என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லங்களவை உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் ஒன்றிய சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டா வுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.  அக்கடிதத்தில், “கொரோனா தொற்று காரணமாக இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50,000 இழப்பீடு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அக்டோபர் 4, 2021 அன்று உத்தரவிட்டது. அரசாங்கத்தின் மதிப்பீடுகளின் படி, இந்தியாவில் கொரோனா இறப்புகள் 3,30,000 ஆகும். இருப்பினும், சமீபத்தில் வெளி யிடப்பட்ட 2021ஆம் ஆண்டிற்கான சிவில் பதிவு முறை (சிஆர்எஸ்) புள்ளிவிவரங்களில் சுமார் 20 லட்சம் கூடுதல் இறப்புகள் ஏற்பட்டுள்ளதைக் காணலாம்.  பல்வேறு மாநில அரசுகள் கொரோனா  காலத்தில் இதுபோன்ற இறப்புகளை மறைத்த தால், அவர்களைச் சார்ந்திருப்பவர்களுக்கு கருணைத் தொகை அல்லது பிற இழப்பீடுகள் கிடைக்கவில்லை. குஜராத் உட்பட பல மாநி லங்கள் கொரோனா இறப்புகளைக் குறை வாகப் பதிவு செய்துள்ளன என்பதை சிஆர்எஸ் புள்ளிவிவரங்களின் பகுப்பாய்விலிருந்து புரிந்து கொள்ளலாம். எனவே, இப்போது வெளி யிடப்பட்ட புள்ளிவிவரங்களின்படி கொரோனா இறப்புகளாக அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்படாத வழக்குகளின் குடும்ப உறுப்பி னர்களுக்கு கருணைத் தொகை உள்ளிட்ட இழப்பீடுகளை விரைவில் வழங்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.  இந்த இழப்பீடை வழங்க ஒரு வெளிப்படை யான மற்றும் எளிதான முறையை உருவாக்க வேண்டும். கோவிட் பாதிக்கப்பட்டவர்களைச் சார்ந்திருப்பவர்கள் இழப்பீடு கேட்டு அலையும் நிலையில் இருக்கக்கூடாது. அதிகாரப்பூர்வ நடவடிக்கைகளுக்கு மத்தியில் அவர்களின் உரிமைகள் மறுக்கப்படக்கூடாது. ஒன்றிய சுகா தார அமைச்சர் இந்த பிரச்சனையில் அவசர கவனம் செலுத்த வேண்டும்” என ஜான் பிரிட் டாஸ் எம்.பி. தனது கடிதத்தில் கோரியுள்ளார்.