states

img

பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு ஆவணங்களை வழங்கிட பிறப்பித்த உத்தரவு ரத்து பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு ஆவணங்களை வழங்கிட பிறப்பித்த உத்தரவு ரத்து பிரதமர் மோடி

தில்லி பல்கலைக்கழ கத்தில் அரசியல் அறிவியல் பாடத்தில் இளங்கலைப் பட்டமும், குஜராத் பல்கலைக்கழகத்தில் முது கலைப் பட்டமும் பெற்றுள்ளதாக கூறப் படுகிறது. கடந்த 2016ஆம் ஆண்டு ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கெஜ்ரி வால் பிரதமர் மோடியின் கல்வித்தகுதி குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது பாஜக தேசிய தலைவராக இருந்த அமித் ஷா, மோடியின்பட்டப்படிப்பு சான்றிதழ்களை செய்தியாளர்கள் முன்னிலையில் வெளியிட்டார். இதனிடையே ஆம் ஆத்மி நிர்வாகி நீரஜ் சர்மா ஆர்டிஐ சட்டத்தின் கீழ் பிரதமர்  மோடியின் 1978இல் பெற்ற பிஏ கல்வி சான்றிதழை வழங்கக் கோரி தில்லி பல்கலைக்கழகத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நிராகரிக்கப்படவே மத்திய தகவல் ஆணையத்தில் நீரஜ்  சர்மா முறையிட்டார்.  இதனையடுத்து  பிரதமர் மோடியின் பிஏ கல்வி சான்றி தழை வழங்க தில்லி பல்கலைக்கழ கத்துக்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தில்லி உயர்நீதி மன்றத்தில், தில்லி பல்கலைக்கழகம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டி ருந்தது. இந்நிலையில், இதுதொடர்பான வழக்கின் தீர்ப்பை தில்லி உயர்நீதி மன்றத்தின் நீதிபதி சச்சின் தத்தா திங்க ளன்று வழங்கினார். அதில், பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு ஆவணங்க ளை வெளியிடுமாறு தில்லி பல்கலைக் கழகத்திற்கு உத்தரவிட்ட மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்வதாக தெரிவித்துள்ளார்.