நாடாளுமன்றத்தை ஒத்திவைத்து ஓட்டம் பிடித்த மோடி அரசு
இந்த ஆண்டு இறுதியில் சட்ட மன்ற தேர்தலை எதிர்கொள் ளும் பீகார் மாநிலத்தில் பாஜகவிற்கு ஆத ரவாக தேர்தல் ஆணையம் மேற் கொண்டு வரும் வாக்காளர் சிறப்பு தீவிர சீர்திருத்த விவகாரம் (வாக்குரிமை பறிப்பு) தொடர்பாக நாடாளுமன்ற இரு அவைகளிலும் விவாதிக்க வேண்டும் என “இந்தியா” கூட்டணி எம்.பி.,க்கள் தொட ர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் மோடி அரசோ விவாதிக்க அஞ்சி நாடாளுமன்றத்தை முடக்கி வருகிறது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை அன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்ற இரு அவைகளும் கூடின. மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பீகார் வாக்காளர் சிறப்பு தீவிர சீர்திருத்த விவ காரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என “இந்தியா” கூட்டணி எம்.பி.,க்கள் முழக்கங்களை எழுப்பினர். ஆனால் வழக் கம் போல மக்களவை, மாநிலங்களவை என இரண்டு அவைகளையும் ஒத்தி வைத்து விட்டு ஓட்டம் பிடித்தது மோடி அரசு. 2 நாள் விடுமுறைக்குப் பிறகு ஆகஸ்ட் 11ஆம் தேதி மீண்டும் நாடாளு மன்ற அவைகள் கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.