கேரளத்தில் அக்.21 முதல் 27 வரை இடது ஜனநாயக முன்னணி போராட்டம்
திருவனந்தபுரம் பீகாரில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த மாதிரியை போன்று, நாடு முழுவதும் செயல்படுத்த வாக்கா ளர்களை நீக்க பாஜக - தேர்தல் ஆணைய கள்ளக் கூட்டணி அடுத்த கட்ட சதித்திட்டத்தை மேற்கொ ண்டு வருகிறது. குறிப்பாக சட்டமன்றத் தேர்த லை எதிர்கொள்ள உள்ள தமிழ்நாடு, கேரளா மாநிலங்களில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத் தத்தை செயல்படுத்த ஆய்வு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. இதனை கண்டித்து கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜன நாயக முன்னணி அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. இந்நிலையில், கேரளாவில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை ஏற்க மாட்டோம் என அறிவித்து அக். 21 முதல் 27 வரை மாநிலம் தழுவிய தொடர் போராட்டத்தை நடத்த உள்ள தாக இடது ஜனநாயக முன்னணி அறிவித் துள்ளது. கருத்தரங்கு திருவனந்தபுரத்தில் நடைபெற்ற செய்தியா ளர்கள் சந்திப்பின் போது இதுதொடர்பாக இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎப்) ஒருங்கி ணைப்பாளர் டி.பி.ராமகிருஷ்ணன் கூறுகை யில்,“குடியுரிமையை நிரூபிக்க வாக்காளர்க ளைக் கட்டாயப்படுத்தும் பீகார் மாதிரியை கேர ளாவில் செயல்படுத்த அனுமதிக்க முடியாது. வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்ஐஆர்) எதிராக இடது ஜனநாயக முன்னணி மாநிலம் முழுவதும் ஒரு வார காலம் போராட் டங்களை நடத்தும். ஏகேஜி ஆய்வு மையம் இந்த வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் சட்ட அம்சங்கள் குறித்து விவாதிக்கும் கருத்த ரங்கை நடத்த உள்ளது. அதே போல வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக இடது ஜனநாயக முன்னணியின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படும். அதாவது அக்டோபர் 21 முதல் 27 வரை மாவட்டங்களில் கருத்த ரங்குகள், கூட்டங்கள், மாலை நேர தர்ணாக்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பொதுக் கூட்டங்கள் நடத்தப்படும்” என அவர் கூறினார். வகுப்புவாத நலன்களை நோக்கமாக... மேலும்,“வாக்காளர் பட்டியல் வெளிப்படை யான முறையில் திருத்தப்பட வேண்டும். 2002-ஐ அடிப்படை ஆண்டாகக் கருதுவது ஏற்றுக்கொள் ளத்தக்கது அல்ல. 2002-க்குப் பிறகு பிறந்தவர் கள் தங்கள் பெற்றோரின் உறவையும் அவர்கள் எந்த வகையைச் சேர்ந்தவர்கள் என்ப தையும் தெளிவுபடுத்தும் படிவங்களை நிரப்ப வேண்டும். இது வாக்காளரின் உரிமைகளை கேள்விக்குள்ளாக்குகிறது. கேரளா அனைத்து சரிபார்ப்புகளையும் முறையாக நடத்தும் மாநி லம் ஆகும். தகுதியற்றவர்கள் நுழைந்தால், அவர்களை நீக்க ஒரு அமைப்பும் உள்ளது. தீவிர திருத்த நடவடிக்கை, உண்மையான வாக்காளர்களை பட்டியலிலிருந்து நீக்குவதை யும், சில வகுப்புவாத நலன்களை நோக்கமா கவும் கொண்டுள்ளது. மதத்தின் அடிப்படை யில் குடியுரிமையை தீர்மானிக்கும் குடி யுரிமை திருத்தச் சட்டத்தை ஒட்டுமொத்த நாடும் எதிர்க்கிறது. நிலைமை இவ்வாறு உள்ள நிலை யில், குடியுரிமை சட்டத்தை செயல்படுத்த வாக் காளர் திருத்தம் ஒரு குறுக்கு வழி ஆகும். சுதந்திரமாகச் செயல்பட வேண்டிய தேர்தல் ஆணையம், கேரளாவில் அரசியல் நோக்கத்தில் தலையிடுகிறது. கேரளாவில் உள் ளாட்சித் தேர்தல் நடக்கவிருக்கும் சூழலில், பட்டியலைத் திருத்துவது சாத்தியமில்லை. அத னால் கேரளாவில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை செயல்படுத்துவதில் இருந்து தேர்தல் ஆணையம் விலக்கு அளிக்க வேண்டும். மேலும் கேரளாவில் உள்ள அனை த்து அரசியல் கட்சிகளும் இந்த விஷயத்தில் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்துள்ளன. விரி வான வாக்காளர் பட்டியல் திருத்தம் தொ டர்பாக முதலமைச்சர் பினராயி விஜயன் சட்ட மன்றத்தில் முன்வைத்த தீர்மானம் ஒருமனதாக அங்கீகரிக்கப்பட்டது” என்பதையும் டி.பி.ராமகிருஷ்ணன் சுட்டிக்காட்டினார்.