states

img

கேரளாவில் டிரம்பின் உருவ பொம்மை எரித்து சிபிஎம் போராட்டம்

கேரளாவில் டிரம்பின் உருவ பொம்மை எரித்து  சிபிஎம் போராட்டம்

அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பால் கடல் உணவு, முந்திரி, தேங்காய், வாசனைப் பொருட்கள் போன்றவற்றின் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்படும். இதற்கு எதி ராக டிரம்பின் உருவ பொம்மையை எரித்தும், அமெரிக்கக் கொள்கை மற்றும் அதனுடன் இணைந்த ஒன்றிய அரசின் நிலைப்பாட்டிற்கு எதிராக 2 நாட்கள் தெருக்களில் போராட்டம் நடத்துவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலச் செயலாளர் எம்.வி. கோவிந்தன் தெரிவித்தார். இதுதொடர்பாக திருவனந்தபுரத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்  போது அவர் மேலும் கூறுகையில், “அமெரிக்காவின் கொள்கை இந்திய மக்களின் வாழ்க்கையையும், பொருளாதார நிலையையும் அழித்து வருகிறது. ஜவுளி, மருந்துகள், தோல், நகைகள் மற்றும் விலைமதிப்பற்ற கற்கள் மீதான அதிக வரிகள் ஒரு  பெரிய அடியாக இருக்கும். அமெரிக்கத் தேர்தலில் டிரம்ப்பை வெற்றி பெறச் செய்ய பிரதமர் நரேந்திர மோடி களத்தில் இருந்தார். அமெரிக்க ஏகாதி பத்தியத்தின் காலடியில் இளைய கூட்டாளியாக இருப்பதால், டிரம்ப்பின் கொள்கைக்கு எதிராக இந்தியாவால் வலுவாக பதிலளிக்க முடியவில்லை. அமெரிக்கா அதிக வரிகளை விதிக்கும்  நாடாக இந்தியா உல்ளது. பாகிஸ்தா னின் வரி 19 சதவிகிதம் மட்டுமே. கடந்த நிதியாண்டில், இந்தியா விற்கும் அமெரிக்காவிற்கும் இடையி லான வர்த்தகம் ரூ.11.47 லட்சம் கோடி மதிப்புடையதாக இருந்தது. அமெரிக்கா விற்கு இந்தியாவின் ஏற்றுமதி ரூ.7.53 லட்சம் கோடி மதிப்புடையதாக இருந்தது. இதில் ஒரு பெரிய பின்னடைவை கூடுதல் வரிவிதிப்பு ஏற்படுத்துகிறது. ரஷ்யாவிலிருந்து இறக்குமதி கூடாது என்ற பெயரில் இந்தியாவிற்கு கூடுதல் வரி அறி விக்கப்பட்டது. இருப்பினும், அமெரிக்கா ரஷ்யாவிலிருந்து யுரேனியம் மற்றும் உரங்களை இறக்குமதி செய்கிறது. சீனா மீது அதிக வரிகளை விதித்து அதை சுற்றி வளைக்கும் அமெரிக்காவின் உத்தி க்கு ஆதரவாக நின்ற இந்தியா இப் போது பின்னடைவை எதிர்கொள்கிறது” என எம்.வி. கோவிந்தன் கூறினார்.