கேரள நிதி அமைச்சர் கே.என்.பாலகோபால்
கேரளாவுக்கு கடந்த ஆண்டு 51,000 கோடி ரூபாய் வருவாய் கிடைக்க வேண்டிய நிலையில் ஜி.எஸ்.டி காரணமாக 32,000 கோடி ரூபாய் மட்டுமே கிடைத்துள்ளது. தற்போதைய புதிய வரி மாற்றம் மூலம் மேலும் ரூ.9,000 கோடி குறையும். ஒன்றிய அரசின் இத்திட்டத்தின் மூலம் லாபம் அடையப்போவது பெரு நிறுவனங்கள் மட்டுமே. ஜி.எஸ்.டி.யால் மாநிலங்களுக்கு மிகப்பெரிய வருவாய் இழப்புகள் ஏற்பட்டு வருகிறது.
ஆல்ட் நியூஸ் தளத்தின் துணை நிறுவனர் பிரதிக் சின்ஹா
நாம் பிறந்த நாடு வேகமாக அநீதிக்கான உதாரணமாக மாறி வருகிறது. மறுபக்கம் முற்போக்கு நாடுகள் என சொல்லிக் கொள்பவை காசா மக்கள் அழிக்கப்படுவதை தடுக்காமல் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன.
திரிணாமுல் எம்.பி., சாகேத் கோகலே
உமர் காலித் சிறையிலடைக்கப்பட்டு 5 வருடங்கள் ஆகியும் விசாரணை நடைபெறவில்லை. பிணையும் கிடைக்கவில்லை. அரசியல் சாசனம், உத்தரவாதம் செய்யும் அடிப்படை உரிமைகளுக்கான மதிப்பு, அவை எழுதி வைக்கப்பட்டிருக்கும் காகிதத்தின் மதிப்புக்குக் கூட ஒப்பாகவில்லை எனில், ஜனநாயகம் இறந்து விட்டது என அர்த்தம்.
பத்திரிகையாளர் முகமது ஜூபைர்
ஒன்றிய அமைச்சர் ஜோதிராதித்யா மகனான மகாநாரியமான் ராவ், மத்தியப் பிரதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். ‘வாரிசு அரசியல்’ என கூக்குரல் போடும் வலதுசாரி ஊடகங்கள் இந்த விஷயத்தில் மட்டும் கள்ள மவுனம் காக்கின்றன.