சத்தீஸ்கர்,ஜனவரி.04- பத்திரிக்கையாளர் ஒருவர் கழிவுநீர் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் காட்சி ஊடகத்தில் பத்திரிக்கையாளராக இருப்பவர் முகேஷ் சந்திரகர். இவர் சில சமீபத்தில் பஸ்தாரில் 120 கோடி ரூபாய் மதிப்பிலான சாலை அமைக்கும் திட்டத்தில் நடந்த முறைகேடுகளை அம்பலப்படுத்தினார்.
இந்நிலையில் புத்தாண்டு அன்று காணாமல் போன முகேஷ் ஊழலில் ஈடுபட்ட ஒப்பந்தக்காரர் சுரேஷ் சந்திரிகளுக்குச் சொந்தமான வளாகத்தில் கழிவுநீர்தொட்டியில் நேற்று இரவு சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.