states

img

"எல்லா இந்தியர்களும் இந்துக்களே" - மோகன் பகவத் வெறி பேச்சு

"எல்லா இந்தியர்களும் இந்துக்களே" என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் மத வன்முறையை தூண்டும் வகையில் பேசியுள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலம் சுர்குஜா நகரில் ஆர்எஸ்எஸ் கூட்டம் ஒன்று நேற்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், "எல்லா இந்தியர்களும் இந்துக்களே. இதனை நாங்கள் கடந்த 1925-ஆம் ஆண்டிலிருந்தே மீண்டும் மீண்டும் கூறி வருகிறோம்" என்று மத வன்முறையை தூண்டும் வகையில் பேசியுள்ளார்.

மேலும் பேசிய அவர், காபூலின் மேற்கிலிருந்து மியான்மர் சின்ட்வின் நதியின் கிழக்கு வரையிலும், திபெத்தின் கிழக்கிலிருந்து இலங்கையின் மேற்கு வரையிலும் உள்ள பகுதிகளில் வழும் மனிதர்கள், 40,000 ஆண்டுகளாக ஒரே மாதிரியான மரபணுவை கொண்டவர்கள் என்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார்.