பாட்னா:
“அனுமன் போல விசுவாசமாகஇருக்கும் நான் வேண்டுமா? அல்லது நிதிஷ் குமார் வேண்டுமா? என்பதை பாஜக முடிவு செய்ய வேண்டும்” என்று லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் சிராக் பஸ்வான் கூறியுள்ளார்.
லோக் ஜனசக்தி கட்சிக்கு மக்களவையில் 6 எம்.பி.க்கள் இருந்தநிலையில், அவர்களில் 5 பேர்அண்மையில் சிராக் பஸ்வானுக்குஎதிராக போர்க்கொடி உயர்த்தினர். நாடாளுமன்றக் கட்சித் தலைவர் பதவியிலிருந்து சிராக்கை நீக்கிய அவர்கள், ராம்விலாஸ் பஸ்வானின் சகோதரரும், சிராக்கின்சித்தப்பாவுமான பசுபதி குமார் பராஸை புதிய தலைவராக தேர்ந்தெடுத்தனர். இதன் பின்னணியில் ஜக்கிய ஜனதாதளம் கட்சித் தலைவர் நிதிஷ் குமார் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.இந்நிலையில்தான் தனித்து விடப்பட்டிருக்கும் சிராக் பஸ் வான் செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அதில், “சிஏஏ, என்ஆர்சி உள் ளிட்ட பாஜகவின் ஒவ்வொரு நடவடிக்கையின் போதும், நிதிஷ் குமார் எதிராக இருந்தார். நான்ஆதரவாக இருந்தேன். தற்போதுபாஜகவுக்கு நான் வேண்டுமா அல்லது நிதிஷ் வேண்டுமா? என்பதை அவர்கள் முடிவு செய்ய வேண்டும்.ராமாயணத்தில் ராமரின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் அனுமன் உடன் இருந்தார். அதேபோல பிரதமர் நரேந்திர மோடிக்கு,லோக் ஜனசக்தி அனுமன் போலஉடன் இருந்தது. ஆனால், அனுமன் கொல்லப்படும் போது ராமர் அமைதியாக இருப்பது சரியாக இருக்காது. தற்போது எங்கள் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் இந்த நெருக்கடியில் பிரதமர் தலையிட்டு சரிசெய்ய வேண்டும். ஆனால்பிரதமர் அமைதி காப்பது எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது” என்று சிராக் கூறியுள்ளார்.தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியுடன் கூட்டணிக்கு வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்விக்கு, “என்னுடைய தந்தையும், லாலு பிரசாத்தும் நண்பர்கள். அதேபோலதேஜஸ்வியும், நானும் சிறுவயதில் இருந்தே நண்பர்கள். அவர்எனக்கு தம்பி போன்றவர். எனவே,தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவெடுப்பேன்” என்றும்சிராக் பஸ்வான், பாஜகவுக்கு ‘செக்’ வைத்துள்ளார்.