திருப்பதி மலைப்பாதையில் இருசக்கர வாகனங்கள் செல்வதற்கு இன்று முதல் நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. வருகின்ற செப்டம்பர் மாதம் வரை காலை 6 மணிமுதல் இரவு 9 மணிவரை மட்டுமே திருப்பதி மலைப்பாதையில் இருசக்கர வாகனங்கள் அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வனவிலங்குகளின் இனப் பெருக்க காலம் என்பதால் இரவு நேரங்களில் மலைப்பாதையில் விலங்குகளின் நடமாட்டம் அதிகளவில் இருக்கக் கூடும். இதனால், பயணிகளின் பாதுகாப்பு கருதி இருசக்கர வாகனங்களுக்கு நேரக்கட்டுப்பாடு விதிக்கப்படுவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.