states

img

வினேஷ் போகத்தால் ஹரியானாவில் பாஜகவிற்கு நெருக்கடி

சண்டிகர் பாரீஸ் ஒலிம்பிக் மல் யுத்தத்தில் மகளிருக் கான 50 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகத் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார். இறுதிப் போட்டிக்கு முன்னதாக நடை பெற்ற எடை பரிசோதனையில் வினேஷ் 100 கிராம் எடை அதிக மாக இருந்ததாக கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த எதிர்பாராத சம்பவத் தால் வினேஷ் போகத் மல்யுத் தத்தில் இருந்து ஓய்வு பெற்ற நிலை யில்,  தகுதி நீக்கத்திற்கு எதிராக ஒட்டுமொத்த நாடே குரல் கொடுத்து வருகிறது.

ஆனால் பாஜக எம்.பி.,க்கள், “கோடி மீடியா” ஊடகங்கள் வினேஷ் போகத்தின் தகுதி நீக் கத்தை நியாயப்படுத்தி வருகின்ற னர். எங்களுக்கும் வினேஷ் போகத் விவகாரத்திற்கும் எந்த சம்பந்தமும்  இல்லை என இந்திய ஒலிம்பிக் சங்க  தலைவர் பி.டி.உஷா ஓடி ஒளிந்து வருகிறார். இதனால் முன்னாள் பாஜக எம்.பி.,யும், முன்னாள் மல் ஹயத்த சம்மேளன தலைவரு மான பிரிஜ் பூஷண் சரண் சிங்கின் பாலியல் வன்கொடுமைக்கு எதி ராக போராடியதன் காரணமாகவே அரசியல் சதியால் வினேஷ் போகத் தின் பதக்க கனவு நொறுக்கப் பட்டது என “இந்தியா” கூட்டணிக் கட்சியினர் குற்றம் சாட்டினர்.

பாஜகவின் சமாளிப்புக்கு சாட்டை அடி

இந்நிலையில், இந்திய ஒலிம் பிக் சங்கத்தின் அலட்சியத்தால் பதக்க வாய்ப்பு பறிபோயுள்ள தால் வினேஷ் போகத்திற்கு ஹரி யானா பாஜக மாநிலங்களவை எம்.பி., பதவி அளிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி கடந்த வாரம் கோரிக்கை விடுத்திருந்தது. இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி., தீபிந்தர் சிங் ஹூடா கூறுகையில், “பதக்கம் வெல்லா விட்டாலும் வினேஷ் போகத் இந்திய நாட்டின் தங்க மகளாக ஆகிவிட்டார். அவரது கடின உழைப்பு மற்றும் போராட்டத்திற்கு பலனாக ஹரி யானா பாஜக, வரவிருக்கும் மாநி லங்களவை தேர்தலில் சீட் வழங்கி, எம்.பி., பதவி அளிக்க வேண்டும். வினேஷ் போகத்திற்கு மாநிலங்களவை பதவி அளிக்க எங்களிடம் (காங்கிரஸ்)  பெரும் பான்மை பலம் இல்லை. இல்லை யென்றால் நாங்கள் மாநிலங்க ளவை பதவி அளித்து நாடாளு மன்றத்திற்கு அனுப்புவோம்” எனக் கூறினார். ஆனால், ஹரியானா பாஜ கவினர் வினேஷ் போகத்துக்கு 30 வயது நிரம்பவில்லை. அவருக்கு 29 வயது மட்டுமே ஆகிறது. அத னால் அவருக்கு மாநிலங்களவை பதவி கொடுக்க முடியாது என சமாளிப்பு வேலையில் ஈடுபட்டது. 

தேர்தலுக்கு முன் 30 வயது

வினேஷ் போகத் 25 ஆகஸ்ட் 1994 அன்று ஹரியானா மாநிலம் பலாலியில் பிறந்தார். தற்போது அவருக்கு 29 வயது என்ற நிலை யில், வரும் ஆகஸ்ட் 24 அன்று வினேஷ் போகத் 30 வயதை எட்டி விடுவார். ஹரியானா மாநிலத்தில் காலியாக உள்ள ஒரே ஒரு மாநி லங்களவை பதவிக்கு செப்டம்பர் 6 அன்று தேர்தல் நடைபெறுகிறது. செப்டம்பர் 6 க்கு முன்னரே வினேஷ் போகத் 30 வயதை நிரம்பிய பெண் என்பதால் மாநி லங்களவை தேர்தலில் போட்டி யிடத் தகுதியானவர் ஆவார். 

வலுக்கும் கோரிக்கை

தொடக்கத்தில் வினேஷ் போகத்திற்கு மாநிலங்களவை வழங்க காங்கிரஸ் கட்சி மட்டும் கோரிக்கை விடுத்து வந்த நிலை யில், தற்போது பாஜகவை தவிர்த்து மற்ற (ஹரியானா) அனைத்து கட்சிகளும் குரல் கொடுத்து வருவ தாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஹரியானா முழுவதும் இளைஞர்கள் உள்ளிட்ட அனை த்து தரப்பினரும் சமூகவலைத் தளங்களில் வினேஷ் போகத்திற்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

இந்த ஆண்டு இறுதியில் ஹரி யானாவில் சட்டமன்ற தேர்தல் வேறு நடைபெற உள்ள நிலையில், வினேஷ் போகத் விவகாரம் பாஜக விற்கு கூடுதல் நெருக்கடியை ஏற் படுத்தியுள்ளது.