மகாராஷ்டிரா மாநிலம் துலே மாவட்டத்தில் அதிவேகமாக வந்த கன்டெய்னர் லாரி ஒன்று கார் மற்றும் சாலையோரத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது மோதிய விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் துலேவில் இருந்து மத்தியப் பிரதேசம் நோக்கிச் சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி ஒன்று அதிவேகமாக வந்து கார் மற்றும் சாலையோரத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த 20 பேர் துலே மற்றும் ஷிர்பூர் ஆகிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.