நாட்டின் மிகப்பெரிய மருத்துவ மனைகளில் ஒன்றான தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தலைநகர் மண் டலத்தில் மட்டு மின்றி அண்டை மாநிலம், நாடு முழுவதிலும் இருந்து சிகிச் சைக்கு மக்கள் வருகின்றனர்.
சிகிச்சை கட்ட மைப்பு பலமாக இருந்தாலும், நோயாளிகளின் உறவினர்கள் தங்குவதற்கு எவ்வித கட்டமைப்பு வசதி கள் கிடையாது. மருத்துவமனையில் வளா கங்களில் திறந்தவெளியில் தங்க வேண் டும் என்ற சூழல் உள்ளது. முக்கியமாக குளிர் அதிகரித்து காணப்படும் டிசம்பர் மாதங்களில் நோயாளிகளின் உறவினர் கள் திறந்தவெளியில் கடும் அவதிக் குள்ளாகுவார்கள்.
இந்நிலையில், தில்லி எய்ம்ஸ் மருத்து வமனையில் உள்ள நோயாளிகளின் அருகே உறவினர்கள் தங்க எய்ம்ஸ் நிர்வாகம் தனி ஏற்பாடு செய்துள்ளது. குறிப்பாக, ஐசியு பிரிவு நோயாளிகளின் உறவினர்களுக்கு காத்திருப்பு அறை யை தயார் செய்துள்ளது. இதுமட்டுமின்றி நாற்காலிகள் உடன் இணைந்த படுக்கை கள், மொபைல் சார்ஜிங் பாயிண்ட்கள், பல்வேறு மதத்தைச் சார்ந்தவர்களுக்கான பிரார்த்தனை கூடங்கள் உட்பட பல அடிப்படை வசதிகளை ஐசியு வார்டுடன் இணைக்கப்பட்டுள்ளன.
அனைத்து காத்திருப்பு அறைகளி லும் குளிர் சாதன வசதி ஏற்படுத்த எய்ம்ஸ் அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இந்த அறி விப்பு மக்களிடையே வரவேற்பை பெற் றுள்ளது.