கடந்த இரண்டு நாட்களில், 2 ஐஐடி மணவர்கள் தற்கொலை செய்துக்கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக ஐஐடி மாணவர்களின் தற்கொலை செய்திகள் அதிகரித்துக் காணப்படுகிறது. இந்த சூழலில், ஐஐடி கான்பூரில் ஆய்வு மாணவர் பிரசாந்த் சிங் என்பவர், தனது விடுதி அறையில் நேற்று தூக்கிட்டு தற்கொலை.
இதைத் தொடர்ந்து ஐஐடி ஐதராபாத்தில் கடந்த 3 மாதத்திற்கு முன்பு பி.டெக் முடித்த மாணவர் மேஹ் கப்பூர், ஐஐடி வளாகம் அருகில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மாடியில் இருந்து குதித்து இன்று தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.