மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கம்மம் (தெலுங்கானா) மாவட்ட மாநாடு பிரம்மாண்ட பேரணி மற்றும் பொதுக்கூட்டத்துடன் நடைபெற்றது. அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பி.வி.ராகவலு, மாநிலச் செயலாளர் தம்மினேனி வீரபத்ரம், மத்தியக்குழு உறுப்பினர் பி.வெங்கட், சிஐடியு அகில இந்திய பொருளாளர் எம்.சாய்பாபு உள்ளிட்ட தலைவர்கள் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினர். பேரணியின் பொழுது நூற்றுக்கணக்கான செங்கொடிகளால் கம்மம் நகர வீதிகள் சிவந்தன.