புதுதில்லி, நவ. 29 - மாநில சட்டப்பேரவைகளில் நிறை வேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல், முடிவெடுக்காமல் காலம் தாழ்த்துவது, கிடப்பில் போடுவது தொட ர்ந்தால், ஆளுநர்கள் முடிவெடுப்பதற்கு விதிமுறைகளை உருவாக்க நேரிடும் என உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. கேரள சட்டமன்றத்தில் நிறைவேற்றப் பட்ட 7 மசோதாக்களை தற்போது குடி யரசுத் தலைவருக்கு அனுப்பியிருக்கும் ஆளுநர், 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.
ஆளுநரின் பொய்யை அம்பலப்படுத்திய கேரள அரசு
கேரள சட்டமன்றத்தில் நிறைவேற்றப் பட்ட எட்டு மசோதாக்களை நியாயமற்ற முறையில் தடுத்து நிறுத்தி வைத்துள்ள தாக, ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு எதிராக, கேரள அரசு ரிட் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கை அரசு சார்பில் தலைமைச் செயலாளரும், சட்ட மன்ற உறுப்பினர் டி.பி. ராமகிருஷ்ண னும் தாக்கல் செய்திருந்தனர். மசோதாக்கள் மீது கோரப்பட்ட விளக்கத்தை அரசு அளிக்கவில்லை என்று ஆளுநர் கூறுவது பொய் என்பதை நிரூபிக்கும் வகையில் ஆவணங்களை யும், முதல்வர் உள்ளிட்ட அமைச்சர் கள் ஆளுநரிடம் அளித்த சுமார் 15 கடிதங்களையும் கூடுதல் வாக்குமூல ஆவணங்களாக உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு ஒப்படைத்தது.
கடைசி நேரத்தில் பார்த்த தந்திரவேலை
இந்த வழக்கு புதனன்று விசார ணைக்கு வரப்போகிறது என்ற நிலையில் செவ்வாயன்று கேரள அரசின் ஒரு மசோதாவிற்கு மட்டும் அனுமதி அளித்து விட்டு, எஞ்சிய 7 மசோதாக்களையும் ஆளுநர் ஆரிப் முகம்மது கான், அவசர அவசரமாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார். தன்னிடம் மசோதாக் கள் எதுவும் இல்லை என காட்டிக் கொள்ளும் தந்திரமாக இதைச்செய்தார். இந்நிலையில், புதனன்று தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கேரள அரசின் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. கேரள அரசுத் தரப்பில், மூத்த வழக்கறிஞரும், இந்தியாவின் முன்னாள் அட்டர்னி ஜெனரலுமான கே.கே. வேணு கோபால் ஆஜரானார். அவர், “ரிட் மனு மீது நோட்டீஸ் அனுப்பப்பட்ட பின்னர், ஆளுநர் ஒரு மசோதாவை மட்டும் அனு மதித்து, மீதமுள்ள 7-ஐ குடியரசுத் தலை வருக்கு அனுப்பியுள்ளார். ஆனால், இந்த மசோதாக்களில் சில, 2021-ஆம் ஆண்டிலேயே நிறைவேற்றப்பட்டவை. அவற்றை 2 ஆண்டுகள் கழித்து குடியர சுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்துள்ளார். இது மாநில நிர்வா கத்திற்கும், மக்களுக்கும் விரோதமான நடவடிக்கை ஆகும். இதன்மீது உச்ச நீதி மன்றம் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
பதில் சொல்ல வேண்டிய ஆளுநரின் பொறுப்பு!
அப்போது, “ஆளுநர் 2 ஆண்டு களாக ஏன் மசோதா மீது உட்கார்ந்திருக் கிறார்?” என்று அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கடரமணியிடம் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கேள்வி எழுப்பினார். அதற்கு “நான் அரசியலில் ஈடுபட விரும்பவில்லை...” என்று அட்டர்னி ஜெனரல் பதிலளித்தார். ஆனால், “நாங்கள் அதில் ஈடுபடுவோம்..” என்று கூறிய தலைமை நீதிபதி, ஆளுநருக் கான கேள்வி அவரின் “பொறுப்புக் கூறல் பற்றியது” என்றார். கேரள அரசின் வழக்கறிஞரும், “பண மசோதா உட்பட மற்ற எட்டு மசோதாக்களை ஆளுநர் அனுமதிக்க வில்லை; இது மாநில ஆட்சியை பாதிக்கிறது” என்றார். அதற்கு, பண மசோதா தொடர்பாக, ஆளுநர் நட வடிக்கை எடுப்பார் என அட்டர்னி ஜென ரல் உறுதியளித்தார். அப்போது பண மசோதா மீது கூட ஆளுநர் அமர்ந்து கொள்வார் என நாங்கள் நினைக்க வில்லை என கூறிய உச்ச நீதிமன்ற அமர்வு, அட்டர்னி ஜெனரலின் உறுதி மொழியை பதிவுசெய்து கொண்டது.
அவசரச் சட்டத்தின்போது சந்தேகம் வரவில்லையா?
தொடர்ந்த வாதங்களை வைத்த கேரள அரசின் வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால், ஆளுநர் நிறுத்தி வைத்தவற்றில் சில மசோதாக்கள், அரசி யலமைப்பு சாசன பிரிவு 213-ன் கீழ் ஆளு நர் பிறப்பித்த அவசர சட்டங்களாகும். அவசரச் சட்டத்தின் போது சட்ட மூலங்கள் தொடர்பாக ஆளுநருக்கு ஏற் படாத ஆட்சேபணை, இப்போது எங்கி ருந்து வந்தது, அதனைத் தற்போது குடி யரசுத் தலைவருக்கு பரிந்துரைக்க என்ன அவசியம் வந்தது?” என்று கேட்டார். அப்போது ஒன்றிய அரசின் அட்டர்னி ஜெனரல் வெங்கடரமணி கேரள அரசு குறித்து சில கருத்துக்களை தெரி வித்த நிலையில், “அட்டர்னி ஜெனரலின் கருத்துகள் வேடிக்கையானது. கல்வி யறிவு, பொது சுகாதாரம் போன்ற பல விஷயங்கள் சிறப்பாக செயல்படுத்தப் படும் மாநிலங்களில் கேரளாவும் ஒன்று” என்பதை நினைவுபடுத்தி பதிலடி கொடுத்தார்.
ஆளுநரின் அதிகார வரம்பை தெளிவுபடுத்த வேண்டும்
அத்துடன், மசோதாக்களை நிறுத்தி வைப்பது மற்றும் குடியரசுத் தலை வருக்கு அனுப்பி வைப்பது தொடர்பான விஷயங்களில் ஆளுநரின் அதிகாரம் குறித்து உச்சநீதிமன்றம் தெளிவான வழிகாட்டுதல்கள் வகுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கை தொடர்பாக திருத்தப்பட்ட அம்சங்களை மனுவில் சேர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். “அரசியலமைப்புச் சட்டத்தில் தன்னிச்சையான எந்த நடவடிக்கைக் கும் தனி அதிகாரம் இல்லை. எந்தச் செய லுக்கும் 14-ஆவது விதி பொருந்தும் என்று அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது” என்பதையும் சுட்டிக்காட்டினார். ஆளு நர் மசோதாக்களை குடியரசுத் தலைவ ருக்கு அனுப்பிவைத்து விட்டதால், கேரள அரசின் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அட்டர்னி ஜெனரல் வலியுறுத்தினார்.
பிரச்சனைக்கு தீர்வு காணவா, அரசியல் கணக்கு தீர்க்கவா?
ஆனால், அதனை ஏற்க மறுத்துவிட்ட உச்ச நீதிமன்றம், 2 ஆண்டுகளாக மசோதாக்களை ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டது ஏன்? என்று கேரள ஆளுநருக்கு கேள்வி எழுப்பியதுடன், பஞ்சாப் ஆளுநர் வழக்கில் பிறப்பித்த உத்தரவின் படி, தாமதமின்றி மசோதாக் களுக்கு ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும்; ஆளுநர் உரிய நேரத்தில் செயல்பட வில்லை என்றால் மசோதாக்கள் மீது ஒப்புதல் அளிப்பதில் விதிமுறைகளை வகுக்க வேண்டியது வரும் என்று எச்ச ரித்தனர். மேலும், முதல்வர் நேரில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஆளுநர் கூறும் நிலையில், “முதலமைச்ச ரை ஆளுநர் சந்திக்க விரும்புவது அர சியல் கணக்கை தீர்த்துக் கொள்ளவா, பிரச்சனைக்கு தீர்வு காணவா?” எனவும் காட்டமாக கேள்வி எழுப்பினர்.