இன்று பட்ஜெட் தாக்கல்
புதுதில்லி, ஜன. 31 - டாலருக்கான நிகரான ரூபாய் மதிப்பு மேலும் சரியும் என்று கூறி யுள்ள பொருளாதார ஆய்வறிக்கை 2022-23, இந்தியப் பொருளாதாரம் பல துறைகளில் வளர்ச்சியடைந்து விட்டதாக குறிப்பிட்டாலும், இறுதியில் வளர்ச்சி பெரும் சரிவையே காணும் என்று ஒப்புக் கொண்டிருக்கிறது. 2023-24 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பிப்., 1 (இன்று) தாக்கல் செய்கிறார். முன்னதாக பட்ஜெட்டின் முன்னோட்டம் என்று அழைக்கப்படும்- ஒன்றிய அரசின் பொருளாதார அலுவல் துறையால் தயாரிக்கப்படும் பொருளாதார ஆய்வறிக்கையை செவ்வாயன்று நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். ஓராண்டில் இந்தியப் பொருளா தாரம் அடைந்த பொருளாதார வளர்ச்சி (GDP), வரி வருவாய், மூலதன செல வினம், வருவாய் பற்றாக்குறை, கடன், வேளாண்மை, தொழில்துறை, சேவைத்துறை, உள்ளிட்டவற்றின் வளர்ச்சி, வளர்ச்சிக்கு உதவிய அம்சங்கள் அல்லது, வளர்ச்சிக்கு தடை யாக இருந்த அம்சங்கள், உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி, பணவீக்கம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆராய்வதே பொருளாதார அறிக்கை ஆகும். அடுத்து வரும் நிதி யாண்டிற்கான வளர்ச்சி இலக்கு களை திட்டமிடுவதற்கான ஆலோசனை களையும் இந்த அறிக்கை வழங்கும். அதன் அடிப்படையில், ஒவ்வொரு ஆண்டும், பட்ஜெட்டிற்கு முன்னதாக பொருளாதார ஆய்வறிக்கை நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
2022-23 நிதியாண்டிற்கான பொரு ளாதார ஆய்வறிக்கையை ஒன்றிய அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாயன்று நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
பொருளாதாரம் மேலும் சரியும்
நாட்டின் பொருளாதாரம் கொரோ னாவுக்கு முந்தைய நிலையை தற்போது அடைந்து விட்டதாகவும், எனினும், 2023-24 நிதியாண்டில் இந்தி யாவின் பொருளாதார வளர்ச்சி 6 சத விகிதம் 6.8 சதவிகிதமாகவே இருக்கும் என்றும் கணிப்பை வெளியிட்டுள் ளார். கடந்த 2021-22 நிதியாண்டில், இது 8.7 சதவிகிதமாகவும், அதைத் தொட ர்ந்து நடப்பு 2022-23 நிதியாண்டில் 7 சத விகிதமாகவும் பொருளாதார வளர்ச்சி இருக்கும் நிலையில், வரும் நிதியாண் டில் இந்தியாவின் பொருளாதார வள ர்ச்சி 6.5 சதவிகிதமாக சரியும் என்று அவர் ஒப்புக் கொண்டிருக்கிறார்.
5 கோடி வேலைவாய்ப்புகளாம்!
ஆற்றல் மற்றும் எரிசக்தித் துறை யில் ஏற்படும் மாற்றங்கள் இந்தியாவை அடுத்த 25 ஆண்டுகளுக்கு வழிநட த்தும் என்றும், மின்சார வாகன உற்பத்தி தொழிற்துறையில் 2030-ஆம் ஆண்டிற் குள் 5 கோடி வேலை வாய்ப்புகள் உரு வாகும் என்றும் கூறியுள்ளார். “கிரீன் எனர்ஜியை நோக்கிய மாற்றத் தில் வாகன தொழில் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2030 ஆம் ஆண்டுக்குள் 2022- 2030 ஆண்டிற்குள் உள்நாட்டு மின்சார வாகனங்கள் (EV) சந்தையின் வளர்ச்சி 49 சதவிகிதம் என்ற ஒருங்கிணைந்த வரு டாந்திர வளர்ச்சி (CAGR) விகிதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. 2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு கோடி யூனிட்கள் விற்பனையை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மின்சார வாகன துறையில் 2030 ஆம் ஆண்டிற் குள் நேரடியாகவும் மறைமுகமாகவும் 5 கோடி வேலை வாய்ப்புகள் உருவாகும். இந்த வளர்ச்சியை ஊக்கப்படுத்தவும் ஆதரவு அளிக்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது” என்று அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அறிக்கையில் அவர் தெரிவித்திருப்பதாவது:
n உலகிலேயே வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா தொடர்கிறது. வாங்கும் திறன் சம நிலை அடிப்படையில் இந்தியா மூன்றாவது பெரிய பொருளா தாரமாகவும் டாலருக்கு நிகரான பண மதிப்பு அடிப்படையில் இந்தியா ஐந்தாவது பெரிய பொருளாதார மாகவும் உள்ளது.
n பெருந்தொற்று மற்றும் உக்ரைன் விவகாரம் காரணமாக இழந்த பொருளாதாரம் மீட்கப்பட்டுள்ளது. நிறுத்தப்பட்ட வளர்ச்சி மீண்டும் தொடங்கியுள்ளது. பல உலக நாடு களுடன் ஒப்பிடுகையில் இந்தியா வின் பொருளாதாரம் மிகச் சிறப்பாக மீண்டுள்ளது.
n இந்திய ஜிடிபி-யில் தனிநபர் நுகர்வு அளவு 2023-ஆம் நிதியாண்டின் 2-ஆவது காலாண்டில் 58.4 சத விகிதமாக உயர்ந்துள்ளது. 2013-14 ஆம் ஆண்டு முதல் இதுதான் அதிகப் படியான 2-ஆவது காலாண்டு வளர்ச்சியாகும். இந்த உயர்வுக்கு கொரோனா தொற்றில் இருந்து கட்டுப் பாடுகள் நீக்கப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதால் தொடு தல் சார்ந்த துறையில் இருக்கும் அனைத்து துறைகளும் அதிகப்படி யான வர்த்தகத்தை பெற்றது, முக்கியமான காரணமாகும். இதில் ஹோட்டல், போக்குவரத்து ஆகி யவை அடங்கும்.
n உலகெங்கிலும் உள்ள ஏஜென்சிகள் இந்தியா 2023-ஆம் நிதியாண்டில் 6.5 முதல் 7.0 சதவிகிதமாக வளர்ச்சி அடைந்து உலகிலேயே வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக இருக்கும் என்று அறி வித்து வருகின்றன. இந்த நம்பிக்கையான வளர்ச்சிக் கணிப்புகளுக்கு மிக முக்கியமான காரணம் இந்தியப் பொருளாதாரத்தில் தனி நபர் நுகர்வில் பெரிய அளவில் மீண்டு வரு வதுதான். தனியார் நுகர்வு அதிகரிக்கும் கார ணத்தால் நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்றுமதிதான் முக்கியமான தூண் என்பதில் இருந்து மாறி சேவைத் துறை முக்கியத்துவம் பெறுகிறது.
• நடப்பு நிதியாண்டில் பட்ஜெட்டில் மூல தன செலவின இலக்கு 7.5 லட்சம் கோடி ரூபா யினை எட்ட வாய்ப்புள்ளது. அரசு முதலீடு களுடன், தனியார் முதலீடுகளையும் அரசு ஊக்குவித்து வருகின்றது. கடந்த ஆண் டைக் காட்டிலும் மூலதன செலவினங்களை ஒன்றிய அரசானது 63.4 சதவிகிதம் அதி கரித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் 8 மாதத்தில் தனியார் முதலீடுகளும் கணி சமான உச்சத்தை எட்டியுள்ளன. தற்போ தைய நிலையில் இப்படியே செல்லும் பட்சத்தில் அரசின் இலக்கு எட்டப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கார்ப்பரேட் நிறுவனங்களில் தனியார் முத லீடுகள் அதிகரிக்கலாம் என்ற நிலையில் அவற்றின் இருப்பு நிலை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நிறுவனங் களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமை யலாம். இது பொருளாதார வளர்ச்சியினை ஊக்குவிக்கலாம்.
• நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 65 சதவிகிதம் பேர் (2021 தரவு) கிராமப்புறங்க ளில் வசிப்பதாகவும், இதில் 47 சதவிகித மக் கள் விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்டு உள்ளது. எனவே, கிராமப்புற வளர்ச்சியில் அரசு கவனம் செலுத்த வேண்டியது அவ சியம். மேலும் சமத்துவம் மற்றும் அனை வரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்வதற்காகக் கிராமப்புறங்களில் வாழ்க் கைத் தரத்தை மேம்படுத்துவதில் அரசு முக்கி யத்துவம் அளிக்க வேண்டும்.
• ரிசர்வ் வங்கியானது, பணவீக்கத்தை இலக்கிற்குள் கொண்டு வர, தொடர்ந்து வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்றது. இதன் பல னாக படிப்படியாக பணவீக்க விகிதமும் சரி வினை எட்டத் தொடங்கியுள்ளது. இந்தியா வில் பணவீக்க விகிதம் நடப்பு ஆண்டில் 6.8 சத விகிதமாக இருக்கலாம். இது தனியார் நுகர் வினை குறைக்கலாம். எனினும் முதலீட் டினை குறைக்கும் அளவுக்கு பலவீனமாக இல்லை.
• சிறு, குறு தொழிலாளர்கள் கடன் பெறு வதில் இருந்த பிரச்சனைகளை அவசர கால கடனளிப்பு உத்தரவாதத் திட்டம் (ECLGS) எளிமைப்படுத்தி உள்ளது. இதன்மூலம் சிறு, குறு தொழில்கள் வளர்ச்சி அடைந் துள்ளன. இதற்கு ஜிஎஸ்டி வசூல் அதி கரிப்பே ஆதாரமாகும்.
• இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி விகித மானது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. உலகளாவிய அளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியிலும், மிகப்பெரிய அளவி லான வளர்ச்சியினை கண்டுள்ளது.
• நாடு இப்போது ஸ்டீல் உற்பத்தியில் உல களாவிய சக்தியாக திகழ்கிறது. உலகின் 2வது பெரிய ஸ்டீல் உற்பத்தியாளராகவும் உள்ளது. ஸ்டீல் உற்பத்தி 88 மெட்ரிக் டன்னா கவும், ஸ்டீல் விற்பனை 86 டன்னாகவும் உள்ளது. 2023இல் ஜிடிபி உயர அதிக மூல தனச் செலவு முக்கிய காரணமாக இருக்கும். சிறு வணிகங்களுக்கான கடன் வளர்ச்சி, வெளிமாநில பணியாளர்கள் பணிக்கு திரும்பு வதும் இதற்கு காரணமாக இருக்கும்.
• வங்கிகள் குறைவான வருமானத்தை யும், லாபத்தையும் பதிவு செய்துள்ளன. இதற்கு இடையில் அமெரிக்காவில் டெக் நிறு வனங்கள் பணிநீக்கம் செய்து வருகின்றன. உலக அளவில் ‘லே ஆப்’ தொடங்கி உள்ளது. இதனால் உலகப் பொருளாதாரம் வீழ்ச்சி அடைவதற்கான ‘ரிஸ்க்’ அதிகரித்துள்ளது.
• இந்தியாவில் ஏற்றுமதியைக் காட்டி லும் இறக்குமதி அதிகமாக இருப்பது மட்டும் அல்லாமல் இரண்டுக்கும் மத்தியிலான வித்தியாசம் தொடர்ந்து அதிகரித்து வருகி றது. இதனால் இறக்குமதிக்கு டாலரில் தொகை செலுத்தப்படும் வேளையில், டாலர் ஆதிக்கம் காரணமாக ரூபாய் மதிப்பு சரியும். கணக்குப் பற்றாக்குறை (CAD) தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு கூடுதலாகப் பாதிக்கலாம். இவ்வாறு பொருளாதார ஆய்வறிக்கை யில் குறிப்பிடப்பட்டு உள்ளது.