ராய்ப்பூர், டிச.28- சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் கடந்த ஞாயிற்றுக் கிழமை `தரம் சன்சத்’ என்ற இந்து மதம் தொடர்பான மத நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த காளிசரண் மகாராஜா என்ற சாமியாரும் பங்கேற்றுப் பேசினார். அப்போது, ‘‘அரசியல் மூலம் நாடுகளை சிறைபிடிப்பதுதான் இஸ்லாமின் இலக்கு. நமது கண் களுக்கு முன்பாக கடந்த 1947-ஆம் ஆண்டு அவர்கள் இதை நிகழ்த்திக் காட்டினா். ஏற்கெனவே ஈரான், இராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளை அவர்கள் கைப்பற்றி விட்டனர். அரசியல் மூலம் வங்க தேசத்தையும், பாகிஸ்தானை யும் இஸ்லாமியர்கள் கைப்பற்றி னர்” என்று மதவெறுப்பை கக்கி யதுடன், “மகாத்மா காந்தியை கொலை செய்ததற்காக நாதுராம் கோட்சே-வுக்கு வீரவணக்கத்தை செலுத்திக் கொள்கிறேன்’’ என்று சர்ச்சையை ஏற்படுத்தினார். இதுதொடர்பாக, சாமியார் காளிசரண் மீது, சத்தீஸ்கர் காவல்துறையினர் ஐபிசி 505(2) 294 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், தன்மீதான வழக்கு குறித்து வீடியோ வெளி யிட்டுள்ள சாமியார் காளிசரண், “காந்தி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததற்காக என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட் டுள்ளது. ஆனால், அதற்கு நான் வருத்தப்படவில்லை. சுதந்திரம் அடைந்த பின்னர் சர்தார் வல்ல பாய் படேல் நாட்டின் முதல் பிர தமர் ஆகாததற்கு காந்தி-தான் காரணம். நேரு - காந்தி குடும்ப அரசியலை ஊக்குவித்ததற்கும் காந்திதான் காரணம். நான் மகாத்மா காந்தியை தேசத்தந் தையாக கருதவில்லை’ என்று மீண்டும் காந்தியை இழிவுபடுத்தி யுள்ளார்.