states

img

நக்சல் தொடர்பு வழக்கிலிருந்து பேராசிரியர் சாய்பாபா விடுவிப்பு

நாக்பூர், அக்.14- மாவோயிஸ்டுகளுடன் தொடர்புடை யதாக குற்றம்சாட்டப்பட்டு பணியி லிருந்து நீக்கப்பட்டு ஆயுதப் பரவல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்ட தில்லி பல்கலைக்கழக பேராசிரி யர் ஜி.என்.சாய்பாபாவை மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை வழக்கி லிருந்து விடுவித்து உத்தரவிட்டுள்ளது.  பேராசிரியர் சாய்பாபா மாவோ யிஸ்டுகளுடன் தொடர்பு வைத்திருந்த தாக குற்றம்சாட்டப்பட்டு கடந்த 2014-ஆம் ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டார். நக்சல் தலைவர்களுடன் சாய்பாபா தொடர்பு வைத்திருந்தார் என்றும் குறிப் பாக தலைவர் முப்பல்ல லஷ்மண ராவ்  என்பவருடன் தொடர்ச்சியாக தகவல் பரி மாற்றத்தில் இருந்ததாகவும் காவல்துறை யினர் தரப்பில் கூறப்பட்டது.  ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் ஹேம் மிஸ்ராவைக் கைது செய்து விசாரித்த போது, சாய்பாபா வுக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே தான் தூது சென்றதாகக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இவ்வழக்கிலிருந்து பேராசிரியர் சாய்பாபா விடுவிக்கப் பட்டுள்ளார். சாய்பாபா தற்போது நாக்பூர் சிறையில் உள்ளார். அவரது உடல் நலனைக் கருத்தில் கொண்டு நாக்பூர் கிளை அவரை விடுவித்துள்ளது. சாய்பாபாவுடன் ஒரு பத்திரிகையாளர், ஒரு மாணவர் உள்பட 6 பேர் கைதாகினர். இதில் ஒருவர் உயிரிழந்துவிட்டார். மற்ற 5 பேரும் வழக்கிலிருந்து விடு விக்கப்பட்டுள்ளனர்.

;