states

img

வேலைவாய்ப்பு உரிமையில் கேரளா முன்னிலை

திருவனந்தபுரம், மே 25- உலகம் முழுவதும் தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு வரும் வேளை யில், தொழிலாளர்களையும், வேலை வாய்ப்பு உரிமைகளையும் பாதுகாத்து கேரளா மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்று  முதல்வர் பினராயி விஜயன் கூறினார். திருவனந்தபுரத்தில் சர்வதேச தொழி லாளர் மாநாட்டை துவக்கி வைத்து பேசிய  அவர், வேலை செய்யும் உரிமையை நிலை நாட்டியதோடு கேரளத்தில் குழந்தைத் தொழிலாளர் முறை சட்டத்திற்கு புறம்பான தாக மாற்றப்பட்டுள்ளது என்றார். தொழிற்  சங்க உருவாக்கம், கூட்டு பேரம், நிர்வாகப்  பங்கேற்பு ஆகியவை இங்கு சாத்தியமாகி உள்ளது என்று சுட்டிக்காட்டினார். தொழிலாளர் கூட்டுறவு சங்கங்கள், நல நிதி வாரியம், ஓய்வூதிய திட்டம், புலம்  பெயர்ந்தோர் உரிமைகள் பாதுகாப்பு போன்றவற்றில் கேரளா முன்மாதிரியாக உள்ளது. 1958 ஆம் ஆண்டிலேயே கேரளா  குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தை இயற்றி யது. இதன் மூலம் தொழிலாளர்களின் உரி மைகளை எவ்வாறு பாதுகாப்பது என்பதை  கேரளாவின் முதல் அரசு உலகிற்கு எடுத்துக்  காட்டியது.

நாட்டிலேயே முதல் மாநிலம்

1969 ஆம் ஆண்டில், கள் இறக்கும் தொழிலாளர் நல வாரியத்தைத் தொடங்கி  நல நிதி வாரியத்தை நிறுவிய நாட்டின்  முதல் மாநிலமாக ஆனது கேரளம். நாட்டி லேயே மிகச்சிறந்த புலம்பெயர்ந்தோர் நட்பு  மாநிலங்களில் கேரளாவும் ஒன்று. மாநி லங்களுக்கு இடையேயான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் நலத் திட்டம் 2010 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. வீட்டுப்  பணியாளர்களின் உரிமைகளைப் பாது காக்கும் மசோதா இறுதிக் கட்டத்தில் உள்  ளது. இப்படி ஒரு மசோதா நாட்டிலேயே முதலாவதாகும். கேரளாவில் உள்ள 84 பகுதிகளில் குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. ஊதியம் மற்றும் சலுகைகள்  அடிப்படையில் கேரளா மற்ற மாநிலங் களை விட முன்னணியில் உள்ளது. ரிசர்வ் வங்கியின் அறிக்கையின்படி, கேரளாவில் கிராமப்புறங்களில் விவசாயம் அல்லாத ஆண் தொழிலாளர்களுக்கு தினசரி ஊதி யம் (ரூ. 677.6) அதிகம். இது தேசிய சராசரி யை விட இரண்டு மடங்கு அதிகம். அறிவுப் பொருளாதாரத்திற்கான பாதையில், தொழில்நுட்ப முன்னேற்றங் கள் மற்றும் நவீன நிர்வாக முறை பயன்  படுத்தப்படுகிறது. பாலினம், சாதி, மதம்  மற்றும் சமூகப் பின்புலம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனைத்து மக்களை யும் கவனித்துக் கொள்வதால் கேரளாவின் வளர்ச்சிப் பாதை வேறுபட்டுள்ளது என்று  அவர் கூறினார். மாநாட்டுக்கு தொழிலா ளர் நலத்துறை அமைச்சர் சிவன்குட்டி தலைமை வகித்தார்.
 

;