states

img

இனி யுபிஐ பரிமாற்றத்திற்கும் 1.1 சதவிகிதம் கூடுதல் கட்டணம்!

புதுதில்லி, மார்ச் 29 - கூகுள் பே, போன் பே, பேடிஎம் போன்ற வற்றைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் 2000 ரூபாய்க்கு அதிகமான யூபிஐ (Unified  Payments Interface - UPI) வணிகப் பணப் பரிமாற்றத்திற்கும் ஏப்ரல் 1 முதல் 1.1 சதவிகிதம் வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக, இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (National Pay ments Corporation of India - NPCI) அண்மை யில் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டிருந் தது. அதில், ஏப்ரல் 1 முதல் யுபிஐ வணிகப் பரிவர்த்தனைகளுக்கு பிபிஐ (Prepaid Payment Instruments - PPI) கட்டணங்களை வசூலிக்குமாறு கூறியிருந்தது. அதாவது, ரூ. 2 ஆயிரத்திற்கும் அதிகமான தொகைகளுக்கு, யுபிஐ-யில் பிபிஐ-களைப் பயன்படுத்தினால், பரிவர்த்தனை மதிப்பில் 1.1 சதவிகிதம் பரிமாற்றம் கட்டணம் வசூ லிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.  மேலும், யுபிஐ மூலமான பணப்பரி மாற்றத்தையும் வகைப்படுத்தி, எரிபொரு ளுக்கான பணப்பரிமாற்றத்திற்கு 0.5 சத விகிதம், தொலைத்தொடர்பு, பயன்பாடுகள் மற்றும் அஞ்சல் அலுவலகம், கல்வி, விவசா யம் தொடர்பான பணப் பரிமாற்றங்களுக்கு 0.9 சதவிகிதம், பல்பொருள் அங்காடிக்கு 0.9 சதவிகிதம் மற்றும் பரஸ்பர நிதி, அரசாங்கம், காப்பீடு மற்றும் ரயில்வே சார்ந்த பணப்பரிமாற்றங்களுக்கு 1 சதவிகிதம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தது.  அந்த அடிப்படையில், யுபிஐ மூலமான வணிகப் பணப்பரிமாற்றங்களுக்கு ஏப்ரல் 1 முதல் கூடுதல் கட்டண ம் அமலுக்கு வரு கிறது. இந்த கூடுதல் கட்டணம் ரூ. 2 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே என்றும், ஒரு வங்கிக் கணக்கி லிருந்து, மற்றொரு வங்கிக் கணக்கிற்கு இடையிலான யுபிஐ பணப்பரிமாற்றத்திற்கு கட்டணம் வசூலிக்கப்படாது என்றும் தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது. பேடிஎம் நிறுவனமும், தங்களின் வாடிக்கையாளர்கள் பணப் பரிமாற்றத்திற்கு எந்தவித கூடுதல் கட்டணமும் செலுத்த தேவையில்லை என விளக்கமளித்துள்ளது.