states

img

சீத்தாராம் யெச்சூரியுடன் நிதிஷ்குமார் சந்திப்பு

புதுதில்லி, செப்.6- தில்லி சென்றுள்ள பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செய லாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் பொதுச் செயலாளர் டி.ராஜா, தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்களை செவ்வாயன்று நேரில் சந்தித்து பேசினார். இதுதொடர்பாக, மகிழ்ச்சி தெரிவித்து டிவிட்ட ரில் பதிவிட்டுள்ள சீத்தாராம் யெச்சூரி, “நிதீஷ்குமார் அவர்களை எமது அலு வலகத்தில் வரவேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாப்ப தற்கும், இந்திய குடியரசின்  மாண்புகளை பாதுகாப் பதற்கும் அனைத்து மதச்சார்பற்ற, ஜனநாயக எதிர்க்கட்சிகளின் ஒற்று மையை கட்டமைப்பதில் தான் உறுதியாக இருப்ப தாக குறிப்பிட்டார். அவரது இந்தக் கருத்து எங்களது நோக்கத்தையும் அனைத்து இந்திய தேச பக்தர்களின் விருப்பத்தையும் பிரதி பலிப்பதாக இருந்தது.  இந்தியாவை ஒரு  சுதந்திரமான, உண்மை யான ஜனநாயக விழு மியங்களைக் கொண்ட,  அனைத்து குடிமக்களுக்கும் சமமான அந்தஸ்தை உறுதி செய்கிற ஒரு நாடாக பாது காத்திட அனைத்து மதச்சார்பற்ற, ஜனநாயக கட்சிகள் மற்றும் சக்தி களை ஓரணியில் திரட்டுவது  அவசியம் என நிதீஷ்குமார் அவர்கள் உறுதிப்பட தெரி வித்தார். அவர் அளிக்கும் இந்த முன்னுரிமையை நாங்கள் வரவேற்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

;