states

img

பணவீக்கம், வட்டி விகிதம் உயர்வு ஜிடிபியில் தாக்கம் செலுத்தும் இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறையும்!

புதுதில்லி, செப். 15 - 2022-23 நிதியாண்டிற்கான இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தை ‘பிட்ச் ரேட்டிங்ஸ்’, ‘மூடிஸ்’ போன்ற சர்வதேச மதிப்பீட்டு நிறுவனங்கள், முந்தைய கணிப்பிலிருந்து குறைத்துள்ளன. 2022-23 நிதியாண்டில், இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பை (GDP) அடிப் படையாகக் கொண்ட பொருளாதார வளர்ச்சி  7.8 சதவிகிதமாக இருக்கும் என்று ‘பிட்ச் ரேட்டிங்ஸ்’ (Fitch Ratings) கணித்திருந் தது. அந்தக் கணிப்பைத் தற்போது, 7 சதவிகி தமாக குறைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல், இந்த வளர்ச்சி அடுத்த நிதியாண்டில் மேலும் குறையும் என்றும் அதிர்ச்சி அளித்துள்ளது. 2023-24 நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 7.4 சத விகிதமாக இருக்கும் என்று முன்பு கணித் திருந்த நிலையில், அது தற்போது 6.7 சதவிகி தத்திற்கு உள்ளாகவே இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.

2022-23 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் (ஜூன் முதல் ஆகஸ்ட் வரை) இந்தியாவின் வளர்ச்சி விகிதமானது 13.5 சத விகிதமாக வளர்ச்சி கண்டுள்ளது. எனினும் இது முன்பு கணிக்கப்பட்டிருந்த 18.5 சத விகிதத்தை விட குறைவு என்பதை ‘பிட்ச் ரேட்டிங்ஸ்’ சுட்டிக்காட்டியுள்ளது. பணவீக்கத்தைக் குறைக்க ரிசர்வ் வங்கி தனது ரெப்போ விகிதத்தை தொட ர்ந்து அதிகரிக்கலாம். 2022-ஆம் ஆண்டு முடி வதற்குள் வட்டி விகிதம் 5.90 சதவிகிதத்தை எட்டலாம். அடுத்த ஆண்டில் 6 சதவிகித மாகவும் வட்டி விகிதம் உயரலாம். எனவே,  இவையெல்லாம் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று ‘பிட்ச் ரேட்டிங்ஸ்’ கூறுகிறது.

2022-23 நிதியாண்டிற்கு உலக நாடுகளின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகித கணிப்பை யுமே ‘பிட்ச் ரேட்டிங்ஸ்’ குறைத்துள்ளது. முன்பு 2.90 சதவிகிதம் அளவிற்கு வளர்ச்சி இருக்கும் என்று வெளியிட்டிருந்த கணிப்பை  தற்போது 2.40 ஆக மாற்றியமைத்துள்ளது. அதேபோல சர்வதேசச் சந்தையில் நிலவி  வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில் உலக நாடுகள் பலவும் 2023-ஆம் ஆண்டின் நடுப்பகு தியில் பொருளாதார மந்த நிலையை எதிர்கொள்ளலாம் என கூறியிருக்கும் ‘பிட்ச் ரேட்டிங்ஸ்’, இதில் இங்கிலாந்து உள்ளி ட்ட ஐரோப்பிய நாடுகள் மோசமான தாக்க த்தை எதிர்கொள்ளலாம் என்றும்எச்சரித்துள்ளது. இதேபோல மூடிஸ் (Moody’s) நிறு வனம், கடந்த செப்டம்பர் 1 அன்று தனது வளர்ச்சிக் கணிப்பை வெளியிட்டிருந்தது. அதில், 2022 மே மாதத்திற்கான வளர்ச்சிக் கணிப்பை முன்பு 8.8 சதவிகிதமாக கணி த்திருந்த நிலையில், அதனை 7.7  சத விகிதமாக குறைத்தது. அத்துடன், 2023  ஆம் ஆண்டிற்கான வளர்ச்சிக் கணிப்பை யும் 5.4 சதவிகிதத்தி லிருந்து 5.2 சதவிகித மாக குறைத்திருந்தது.

ஆசிய பொருளாதாரங்களின் வளர்ச்சிக்கு பணவீக்கமும், விநியோக சிக்கல் களும் தடையாக இருப்பதாக ‘மூடிஸ்’ நிறு வனம் தெரிவித்துள்ளது. வளர்ந்து வரும் ஆசிய பொருளாதாரங் களுக்கு அடுத்த 12 முதல் 18 மாதங்களில் பணவீக்கமும், விநியோக சிக்கல்களும் மிகப்பெரிய ஆபத்துகளாக இருக்கும். பண வீக்கம், விநியோக சிக்கல்களுக்கு அடுத்த படியாக வட்டி விகிதம் உயர்வு, பொருளா தார வளர்ச்சி வேகம் குறைவு ஆகியவை முக்கிய பிரச்சனைகளாக இருக்கும் என ‘மூடிஸ்’ எச்சரித்துள்ளது.

;