states

img

அக்டோபர் மாதம் ஜிஎஸ்டி வசூல் 1.72 லட்சம் கோடி

அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி மூலம் ரூ.1,72,003 கோடி வசூலாகி  உள்ளதாக ஒன்றிய நிதி அமைச்சகம் தெரி வித்துள்ளது. இது  தொடர்பாக ஒன்  றிய நிதி அமைச்ச கம் வெளியிட்ட அறிக்கையில், “அக்டோபர் மாத  ஜிஎஸ்டி வசூல்  1,72,003 கோடி  ரூபாயாக உள்  ளது. இதில் மாநில ஜிஎஸ்டி ரூ. 30,062 கோடியும், ஒன்றிய ஜிஎஸ்டி மூலம்  ரூ.38,171 கோடியும்,  ஐஜிஎஸ்டி மூலம்  ரூ.91,315 கோடியும் (பொருட்கள் இறக்கு மதி மூலம் கிடைத்த ரூ.42,127 கோடியும் சேர்த்து), செஸ் வரி மூலம் ரூ.12,456 கோடி யும் (பொருட்கள் இறக்குமதி மூலம் கிடைத்த ரூ.1,294 கோடியும் சேர்த்து)  கிடைத்துள்ளது.  கடந்த ஆண்டு அக்டோபர் மாதம்  வசூலான தொகையைவிட 13 சதவீதம்  கூடுதலாக ஜிஎஸ்டி வருவாய் நடப்  பாண்டு அக்டோபர் மாதம் கிடைத்துள் ளது. குறிப்பாக 2022, 2023-24 நிதியாண்டில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.60 லட்சம் கோடி யை தாண்டுவது இது 5-ஆவது முறை யாகும்.  நடப்பு நிதியாண்டில் சராசரி ஜிஎஸ்டி  வசூல் ரூ.1.66 லட்சம் கோடியாக உள்ளது.  இது கடந்த நிதியாண்டின் சராசரியைவிட 11 சதவீதம் அதிகமாகும்” என்று ஒன்றிய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.