states

img

எல்லை பாதுகாப்புப் படை தேனீக்கள்

இந்தியா, வங்கதேசத்துடன் 4096 கிமீ  நீளத்திற்கு எல்லையைப் பகிர்ந்து  கொள்கிறது. இதில் 2,217 கி.மீ.  எல்லைப்பகுதி மேற்குவங்க மாநிலத்தில்  உள்ளது. இந்த எல்லைப் பகுதியில் கால்நடை, தங்கம், வெள்ளி மற்றும்  போதை மருந்துகள் கடத்தும் செயல்  கள், அதிகமாக நடைபெறுவதாகவும் கடத் தல்காரர்கள் வேலியை உடைப்பதும், உடைக்க முயற்சிப்பதுமான நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறுவதாகவும் பிஎஸ்எப் அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் எல்லை வேலிகளில் குறிப்பிட்ட  இடைவெளியில் மரச் சட்டகத்தோடு தேன்  கூடுகள் அமைக்கப்படும் என புதிய அறி விப்பு வெளியிடப்பட்டுள்ளது. முதல் கட்ட மாக நாடியா மாவட்டத்தின் எல்லைப்புற  பகுதிகளில் வாழும் மக்களுக்கு தொழில்  வாய்ப்பு ஏற்படுத்தி தேன் கூடுகள் தரும்  நோக்கிலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்திய எல்லை பாதுகாப்பு படையின் இந்த முயற்சிக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.