லக்னோ, செப்.19- சமாஜ்வாதி கட்சியினர்- ஆயிரக் கணக்கானோர், உத்தரப் பிரதேச சட்டப் பேரவையை நோக்கி பேரணி நடத்தினர். உ.பி.யில் பெண்களுக்கு எதிரான குறிப்பாக, பட்டியல் வகுப்பினருக்கு எதிரான குற்றங்கள் தொடர் அவல மாக மாறிவிட்டன. உன்னாவ், ஹத்ராஸ் என ஏராளமான சம்பவங்கள் நடந்தும், ஆதித்யநாத் அரசு அலட்சிய மாகவே உள்ளது. இந்த வரிசை யில், கடந்த சில நாட்களுக்கு லக்கீம்பூர் கெரியில், பட்டியல் வகுப்பைச் சேர்ந்த 2 சிறுமிகள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டது டன், அவர்கள் கொன்று தூக்கில் தொங்கவிடப்பட்டனர். இந்த படு கொலைச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையிலேயே, ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சியில் முன்னெப்போதும் இல்லாத அள விற்கு சட்டம் - ஒழுங்கு கெட்டு விட்ட தாகவும், பெண்கள், குழந்தை களுக்கான பாதுகாப்பை உறுதிப் படுத்தக் கோரி, லக்னோ எஸ்பி அலு வலகத்தில் துவங்கி, ஆளுநர் மாளிகை, காந்தி சிலை வழியாக, சமாஜ்வாதி கட்சியினர் பேரணி நடத்தினர். முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ், அக்கட்சியின் எம்எல்ஏ -க்கள் 111 பேர், எம்எல்சி-க்கள் 9 பேர் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்ட ர்கள் பேரணியில் கலந்துகொண்டனர். உ.பி. சட்டப்பேரவையின் மழைக் கால கூட்டத்தொடர் திங்களன்று தொடங்கிய நிலையில், சமாஜ்வாதி கட்சியினர், பாஜக அரசுக்கு எதிரான பதாகைகளை ஏந்தியபடி பேரவை நோக்கி பேரணியாக சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.