states

“குரானை தவறாக புரிந்துகொண்டு ஹிஜாப்பிற்கு தடைவிதித்த கர்நாடக உயர்நீதிமன்றம்”

புதுதில்லி, செப். 11 - ‘ஹிஜாப்’, ‘முத்தலாக்’ குறித்த குர்- ஆன் வசனங்கள் குறித்து, வழக்கறி ஞர் நிஜாம் பாஷா உச்சநீதிமன்றத்தில் ஆழமான விளக்கங்களை அளித்துள்ளார். ‘ஹிஜாப்’ அணிவது இஸ்லாத்தில் கட்டாயமில்லை என்று குர்ஆன் கூறுவ தாகவும், ‘முத்தலாக்’ குர்-ஆனிலேயே இடம் பெற்றிருப்ப தாகவும் கர்நாடக உயர்நீதி மன்றம் தவறான புரிதல்களை ஏற்படுத்தி கொண்டு, அதனடிப்படையிலேயே ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு வழங்கியிருப்பதாகவும் வழக்கறிஞர் நிஜாம் பாஷா கூறியுள்ளார். பாஜக ஆளும் கர்நாடக மாநிலத்தில், இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு கடந்த 2022 பிப்ரவரியில் தடை விதிக்கப்பட்டது. இதற்கு எதிராக முஸ்லிம் மாணவிகள் தொடுத்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், “ஹிஜாப்  இஸ்லாமிய சட்டத்தில் அத்தியாவசிய மான வழக்கம் அல்ல. எனவே, கல்வி  நிலைய‌ங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும்” என‌ 2022 மார்ச் 15-ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து, இஸ்லாமிய மாணவிகள்  6 பேர்  உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதே போல வேறு பலரும் வழக்குகள்தொடர்ந்தனர். இந்த வழக்குகள் மீது செப்டம்பர்  5-ஆம் தேதி முதல் உச்சநீதிமன்றம்  விசாரணை நடத்திவருகிறது. நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதான்ஷு துலியா அமர்வு  முன்பு, மனுதாரர்கள் தரப்பில் மூத்த   வழக்கறிஞர்கள் ராஜீவ் தவான்,  சஞ்சய் ஹெக்டே, தேவதத் காமத் ஆகியோ ரும், ஒன்றிய அரசின் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நடராஜூம், கர்நாடக அரசுத் தரப்பில் அம்மாநில அட்வகேட் ஜெனரல் பிரபுலிங் நவட்கியும் ஆஜராகி வருகின்றனர்.

இதில், செப்டம்பர் 8-ஆம் தேதி நடை பெற்ற விசாரணையின்போது, மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் நிஜாம் பாஷா ஆஜராகி வாதாடினார். அப்போது அவர், ஹிஜாப் பற்றி இஸ்லாம் கூறுவது என்ன? என்பது குறித்த ஆழமான விளக்கங்களை எடுத்துரைத்தார். “இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 25, ஒரு மதத்தின் அத்தியாவசிய நடை முறைகளை மட்டுமே பாதுகாக்கிறதா? அல்லது அனைத்து மத நடைமுறை களையும் பாதுகாக்கிறதா?” என்ற கேள்வி யை உச்சநீதிமன்ற நீதிபதிகள் முன்பு  எழுப்பிய நிஜாம் பாஷா, ‘சட்டப்பிரிவு 25-ன் கீழ் மதத்தின் அத்தியாவசிய நடை முறைகள் மட்டுமே பாதுகாக்கப்படு கின்றன’ என்ற அட்டர்னி ஜெனரலின் வாதத்தை, ஸ்ரீஷிரூர் மடம் வழக்கில் 7 நீதிபதிகள் அமர்வு நிராகரித்திருப்பதை சுட்டிக்காட்டினார். எனினும், துர்கா கமிட்டி அஜ்மீர் வெர்சஸ் சையத் ஹுசைன் அலி மற்றும் உள்ளிட்டோர் தொடர்பான தீர்ப்பில், 5 நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பு, 7 நீதிபதிக ள் அமர்வின் தீர்ப்பிலிருந்து வேறுபடுவ தால், தற்போது, 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு இதனை ஆய்வு செய்து வருகிறது” என்பதை அவரே கூறியதுடன், பொதுவாக, “இறையியல் கோட்பாடுகள் குறித்த பல்வேறு விளக்கங்களில் ஒன்றை  மட்டும் ஏற்றுக்கொள்வதை நீதிமன்றம் தவி ர்க்க வேண்டும்” என்று வலியுறுத்தினார். இந்த விஷயத்தில் பாபர் மசூதி வழக்கில் 5 நீதிபதிகள் அளித்த தீர்ப்பின் பகுதியையும் எடுத்துக் காட்டினார். “எங்கள் நீதிமன்றம் அரசியலமைப்பு உத்தரவின் அடிப்படையில் நிறுவப்பட்டது. ஆகவே, மதக் கோட்பாடுகளின் விளக்கத்திற்கு நீதிமன்றத்தை வழிநடத்தும் முயற்சியை நாங்கள் ஏற்க முடியாது” என்று நீதிபதிகள் குறிப்பிட்டதைச் சுட்டிக்காட்டினார். மேலும், “மதத்தில் பல பிரிவுகள் மற்றும் பல கருத்துக்கள் உள்ளன. மேலும்  வேதத்தைப் பற்றிய ஒவ்வொரு நபரின் புரிதலும் பாதுகாக்கப்பட வேண்டும். ஷைரா  பானு வழக்கில், நீதிமன்றம் வேதங்களை விளக்கவில்லை. நீதித்துறையின் தீர்ப்பை மட்டுமே வழங்கியது. குரியன் ஜோசப் மட்டுமே புனித நூல்களின் அடிப்படையில் வியாக்யானம் செய்தார். ஆனால், பெரும்பான்மை தீர்ப்பு, சட்டத்தின்படியே வழங்கப்பட்டது”என்பதையும் எடுத்து ரைத்தார்.

இதற்கு அடுத்ததாக, வழக்கறிஞர் பாஷா இஸ்லாமியச் சட்டங்கள் தொடர்பான வாதத்திற்குள் நுழைந்தார். இஸ்லாமியச் சட்டத்தின் ஆதாரங்கள் - குர்ஆன், ஹதீஸின் சுன்னா (நபியின் கூற்றுகள் மற்றும் மரபுகள்), இஜ்மா மற்றும் கியா ஆகியவற்றை விளக்கிய அவர்,  கர்நாடக உயர் நீதிமன்றம் இஸ்லாமிய வசனங்களை தவறாகப் புரிந்து கொண்டே ‘ஹிஜாப் கட்டாயம் இல்லை’ என்று தீர்ப்பளித்து இருப்பதாக கூறினார். கர்நாடக உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பின் அடிக்குறிப்புகளுக்கு குர்-ஆன் மொழிபெயர்ப்பாளரின் கருத்தையே ஆதாரமாக எடுத்துக் கொண்டுள்ளது. அதி லொரு அடிக்குறிப்பு,  ‘ஜில்பாப்’ பற்றிய வசனம் தொடர்புடையது. தலை மற்றும் மார்பை மட்டுமே மறைப்பது ‘ஹிஜாப்’. இதற்கு மாறாக, முழு உடலையும் மறைப்பதுதான் ‘ஜில்பாப்’. அந்த வகையில், ஜில்பாப் கட்டாயமில்லை என்று குர்-ஆன் மொழிபெயர்ப்பு ஆசிரியர் அப்துல்லா யூசுப் அலி கூறியுள்ளார். ஆனால், ஹிஜாப் அவசியம் என்பதை  குர்-ஆனின் வசனம் ‘சூரா 24’ குறிப்பிடு கிறது. ஹிஜாப் நடைமுறையைக் கடைப்பிடிக்காதவர்களுக்கு குரானில் தற்காலிக தண்டனைகள் எதுவும் பரிந்து ரைக்கப்படவில்லை என்பதால், ஹிஜாப் கட்டாயமில்லை என்ற முடிவுக்கு வந்ததாக வும் கர்நாடக உயர்நீதிமன்றம்கூறியுள்ளது. ஆனால், பொதுவாகவே, ஆன்மீக கீழ்ப்படியாமைக்கு குர்-ஆனில் தற்காலிக தண்டனைகள் இல்லை. மறுமைக்கால வாழ்க்கைக்கே அது தாக்கங்களை கொண்டிருக்கிறது. குர்-ஆனில் ஹிஜாப் விதிமீறலுக்கு மட்டுமல்ல, நமாஸ், ரோஜா (Namaz, Roza ) மீறலுக்கும் கூட  தற்காலிக தண்டனைகள் இல்லை. குர்- ஆன் என்பது கடவுள் மற்றும் நம்பிக்கை யின் வார்த்தைகள். கடவுளின் வார்த்தைக்கு விசுவாசமாக இருப்பதே ஒரு முஸ்லிமாக இருப்பதற்கு முதல் முன்நிபந்தனையாகும். முக்காடு மிக முக்கியமானது என்று  நபிகள் கூறும்போதும், தீர்க்கதரிசி யைப் பின்பற்றுங்கள் என்று குர்ஆன்  கூறும்போதும், அது இன்றியமையாத வைதான்.

‘காலப்போக்கில் குர்-ஆனின் சில வசனங்கள் அர்த்தத்தை இழந்துவிட்டன’ என்று போகிற போக்கில் கர்நாடக உயர்  நீதிமன்றம் கூறியிருக்கிறது. இது அவதூறா னது. ஏனெனில், நம்பிக்கை கொண்ட இஸ்லாமியர்களுக்கு, குர்-ஆன் அனைத்து காலத்திற்கும் சரியானது. எனவே வசனங்கள் காலப்போக்கில் அர்த்தத்தை இழந்துவிட்டன என்று கூறுவது தெய்வ நிந்தனையின் எல்லையாகும். குர்-ஆனில் கூறப்பட்டுள்ளதை எல்லாம் கட்டாயமாக்க முடியாது என்று உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. அதற்கு முத்தலாக்கை உதாரணம் காட்டியுள்ளது. ஆனால், முத்தலாக் குர்-ஆனிலோ அல்லது ஹதீஸிலோ கூட குறிப்பிடப்படவில்லை என்பதுதான் உண்மை. இந்த வகையிலும், கர்நாடக உயர்  நீதிமன்றம் செய்திருப்பது பொருத்தமற்ற ஒப்பீடு. நீதிபதி குப்தா காலையில் தலைப்பாகை  அணிவது கலாச்சாரம் என்று குறிப்பிட்டார்.  அது பாதுகாக்கப்படுகிறது. இந்திய அர சியலமைப்பின் பிரிவு 29(1) இன் படி,  கலாச்சார நடைமுறைகள் பாதுகாக்கப்படு கின்றன. ஹிஜாப் அணிவது, கலாச்சாரம் என்ற வகையிலும் பாதுகாக்கப்பட வேண்டும்.

அதிர்ஷ்டவசமாக அல்லது துரதிர்ஷ்ட வசமாக, நான் அனைத்து ஆண்கள் பள்ளிக்குச் சென்றேன். மேலும் எனது வகுப்பில், ஒரே நிறத்தில் ஒரே சீருடையில் தலைப்பாகை அணிந்த பல சீக்கிய சிறுவர்கள் இருந்தனர். அங்கெல்லாம் தலைப்பாகை ஒழுக்கத்தை மீறாது என்று நிறுவப்பட்டுள்ளது. சீக்கியம் இந்திய கலாச்சாரம் என்றால், இஸ்லாமும்தான் 1400 ஆண்டுகளாக உள்ளது. ஹிஜாப்பும் இருக்கிறது. நாம் பிரான்ஸைப் போன்ற நடை முறைகளைக் கொண்டிருக்கிறோம் என்று நினைத்தால் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம். இவ்வாறு வழக்கறிஞர் நிஜாம் பாஷா  உச்சநீதிமன்றத்தில் வாதங்களை வைத்துள்ளார். இந்த வழக்கு திங்களன்று (செப்டம்பர் 12) மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

;