உலகின் மாசு நிறைந்த மோசமான நகரங்களின் பட்டியலை சுவிட் சர்லாந்து நாட்டின் “ஐக்யூ ஏர்” என்ற அமைப்பு திங்களன்று வெளியிட் டது. இந்த பட்டியலில் நாட்டின் தலை நகர் மண்டலமான தில்லி வழக்கமாக முதலிடம் பிடித்துள்ளது. மேலும் 2 இந்திய நகரங்கள் டாப் 10 பட்டியலில் இணைந் துள்ளன. மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தா காற்று தரக்குறியீடு 196 என்றளவில் 4-ஆவது இடத்தையும், மகாராஷ்டிரா தலைநகர் மும்பை காற்று தரக் குறியீடு 163 என்றளவில் 8-ஆவது இடத்தையும் பிடித்துள்ளது. கடந்த சில நாட்களாக தில்லியின் காற்று தரக்குறியீடு 500-க்குள் இருந்த நிலையில், தீபாவளி பண்டிகை யின் பொழுது பட்டாசு வெடித்ததின் கார ணமாக தில்லியின் காற்று தரக்குறியீடு 680 என்ற அளவுக்கு மோசமடைந்தது. தீபாவளி பண்டிகையால்தான் கொல் கத்தா, மும்பை நகரங்கள் “ஐக்யூ ஏர்” ஆய்வில் டாப் 10இல் இடம்பிடித்துள்ளன. லாகூர் (பாகிஸ்தான்), பாக்தாத் (இராக்), சராஜீவோ (போஸ்னியா ஹெர்ஜிகோ வினா), குவைத் சிட்டி (குவைத்), தோஹா (கத்தார்), கராச்சி (பாகிஸ்தான்), மிலானோ (இத்தாலி) ஆகிய நகரங்கள் டாப் 10 பட்டியலில் உள்ளன.