states

தீக்கதிர் விரைவு செய்திகள்

இன்று ஒன்றிய அமைச்சரவைக் கூட்டம்!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமையன்று ஒன்றிய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில், தீபாவளி போனஸ், ஒன்றிய அரசு ஊழியர்களின் அக விலைப்படி உயர்வு உள்ளிட்டவை குறித்து முடிவெடுக்கப்படலாம் என்றும், அத்துடன் நாட்டின் பல்வேறு திட்டங்களுக்கு அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி யுள்ளன.

எம்பிபிஎஸ்: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

2022-23-ம் ஆண்டுக்கான மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புக்கான (எம்.பி.பி.எஸ்  மற்றும் பி.டி.எஸ்) அரசு மருத்துவ இடங்கள், சுயநிதி மருத்துவக்கல்லூரிகளில் உள்ள அரசு  மருத்துவ இடங்கள், சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள நிர்வாக மருத்துவ இடங்களில் சேர்வதற்கு செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 3 வரை www.tnhealth.tn.gov.in, www.tnmedical selection.org என்ற இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

பாஜக அமைச்சரின் பங்களாவை இடிக்க உத்தரவு

ஒன்றிய பாஜக அமைச்சரவையில், சிறு, குறு, நடுத்தர தொழில்துறை அமைச்சராக இருப்பவர் நாராயணன் ரானே. இவர் மும்பை கடற்கரையோரம் விதிமுறைகளை மீறி, அனுமதிபெற்ற 8 ஆயிரம் சதுர அடி அளவை விட 300 சதவிகிதம் கூடுதலாக 22 ஆயிரம் சதுர அடிக்கு பங்களா கட்டியிருந்தார். இதற்கு எதிராக தொடரப்பட்டிருந்த நிலையில், ஒன்றிய அமைச்சர் நாராயண் ரானேவின் பங்களாவை இடிக்க மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் ரூ. 10 லட்சம் அபராதமும் விதித்துள்ளது.

கர்நாடக பள்ளி பாடத்திட்டத்தில் பகவத் கீதை!

“கர்நாடகத்தில் தற்போதுள்ள பள்ளி பாடத்திட்டத்தின் கீழ் பகவத்கீதை போதனைகள் சேர்க்கப்படாது. அத்தகைய எண்ணம் அரசுக்கு இல்லை. ஆனால் டிசம்பர் மாதம் முதல்  இந்த பாடத்திட்டத்தில் தார்மீக பாடத்தை சேர்க்க திட்டமிட்டுள்ளோம். அந்த பாடத்தில் பகவத்கீதை  போதனைகள் இருக்கும். அது குழந்தைகளுக்கு கற்பிக்கப்படும். இதுகுறித்து அரசுக்கு பரிந்துரை  செய்ய ஒரு குழு அமைத்துள்ளோம். அந்த குழு வழங்கும் அறிக்கையின் அடிப்படையில் பகவத்  கீதை சேர்க்கப்படும்” என்று கர்நாடக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பி.சி.நாகேஷ் தெரிவித் துள்ளார்.

ராஜஸ்தான் அரசு மீது கோமாதாவுக்கு கோபமாம்..

ராஜஸ்தான் மாநிலம் புஷ்கர் சட்டப் பேரவைத் தொகுதி பாஜக எம்எல்ஏ சுரேஷ் சிங் ராவத், திங்களன்று பசுவுடன் சட்டப் பேரவை வளாகத்துக்கு வந்தார். அவரை செய்தியாளர்கள் சூழ்ந்த நிலையில், சுரேஷ் சிங் கொண்டு வந்திருந்த பசு மிரண்டு ஓடியது. இதையடுத்து செய்தி யாளர்களுக்குப் பேட்டியளித்த பாஜக எம்எல்ஏ சுரேஷ் சிங் ராவத், “கால்நடைகளைத் தாக்கும் அம்மை நோய் மீது அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காகவே சட்டப் பேரவைக்கு பசுவுடன் வந்தேன்” என்று தெரிவித்தார். அத்துடன், “பசு மிரண்டு ஓடுவதன் மூலம் ராஜஸ்தான் அரசின் மீது கோமாதா வும் கோபத்தில் இருப்பது தெரிகிறது” என்று கூறியுள்ளார்.

நந்திகிராமை பாஜகவிடம் இழந்த மம்தா!

மேற்குவங்க மாநிலம் நந்திகிராமில் கூட்டுறவு அமைப்புக்கான தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. கூட்டுறவு அமைப்பான பெகுடியா சமாபாய் கிரிஷி சமிதியில் மொத்த முள்ள 12 இடங்களுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடைபெற்றது. இதில் 11 இடங்களை பாஜக கைப்பற்றியுள்ளது. திரிணாமுல் காங்கிஸ் ஒரே இடத்தில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது.

சட்டப்பேரவை  அடுத்த மாதம் கூடுகிறது

சென்னை, செப்.20 தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டம் மானியக்கோரிக்கை மீதான விவாதங்க ளுடன் மே மாதம் நடந்து முடிந்தது. ஒரு கூட்டத்தொடர் முடிந்ததும் அடுத்த 6 மாதங்களுக்குள் மீண்டும் பேரவைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்பது பேரவை விதியாகும். அந்த வகையில், அடுத்த மாதம் தீபாவளிக்கு முன்னதாக 2-வது வாரத்தில் சட்டப்பேரவைக் கூட்டத்தை 5 நாட்கள் வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூற ப்படுகிறது. இந்த கூட்டத்தில், மறைந்த முதல மைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்த நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை ஏற்கனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் அந்த அறிக்கையின் முழு விவரங்களும் இப்போது கூடும் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்ப் பார்க்கப்படுகிறது.  அது மட்டுமின்றி தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஒரு நபர் ஆணையமான அருணா ஜெகதீசன் குழு அளித்துள்ள அறிக்கையும் வெளி யாக வாய்ப்புள்ளது. ஸ்மார்ட் சிட்டி முறைகேடு தொடர்பான அறிக்கை மற்றும் ஆன்லைன் ரம்மி விளை யாட்டுக்கு தடை போன்ற அவசர சட்டங்க ளும் தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது.

சென்னை பல்கலை. பேராசிரியர்களுக்கு நோட்டீஸ்

சென்னை,செப்.20- அரசு உதவி பெறும் கல்லூரிகள், சுய நிதி கல்லூரிகளில் பணியாற்றும் முதல்வர் கள், சிண்டிகேட் தேர்தலில் போட்டி யிட்டு தேர்வாகும் நடைமுறை அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில், சிண்டிகேட் தேர்த லில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச் சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக சென்னை பல்கலைக்கழகத்தில் கடந்த செப். 14 ஆம் தேதி பேராசிரியர்கள் போரா ட்டத்தில் ஈடுபட்டனர். முறையான அனு மதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட 7 பேராசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு சென்னை பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், அலுவலக நேரத்தில் பல்கலை க்கழக நிர்வாகத்துக்கு எதிரான முழக்கங் களை எழுப்பி தர்ணாவில் ஈடுபட்ட பேரா சிரியர்கள், செப்டம்பர் 21 ஆம் தேதிக் குள், இந்த பிரச்சனை தொடர்பான விரி வான விளக்கத்தை அளிக்க வேண்டும். விளக்கம் அளிக்கத் தவறினால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தசரா பண்டிகை: சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை, செப். 20 - தசரா பண்டிகையையொட்டி அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதன்படி, அக்.1 முதல் 4ஆம் தேதி வரை,சென்னையிலிருந்து திருச்செந்தூர்,குலசேகரப்பட்டினத்திற்கும் கோயம்புத்தூரிலிருந்து திருச்செந்தூர், குலசேகரப்பட்டினத்திற்கும் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது. பண்டிகை முடிந்து திரும்பிட ஏதுவாக, அக்.6 முதல் 10ஆம் தேதி வரை யிலும் கூடுதல் பேருந்துகள் இயக்கப் படும். அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில்  www.tnstc.in  மற்றும் tnstc official app மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அரசு விரைவு போக்கு வரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளி யிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.





 


 

 

;