கொலீஜியத்திற்கு வழக்கறிஞர்கள் வலியுறுத்தல்
சென்னை, பிப்.3 - சிறுபான்மை மக்களுக்கு எதிராக வெறுப்புப் பிரச்சாரத்தை மேற் கொண்டுவரும் வழக்கறிஞர் விக்டோ ரியா கௌரியை உயர்நீதிமன்ற நீதிப தியாக நியமித்துள்ள உச்சநீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரையை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று அகில இந்திய வழக்கறிஞர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் மாநில செயல் தலைவர் ஏ.கோதண்டம், மாநில பொதுச்செய லாளர் ச.சிவக்குமார் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 17.01.2023 அன்று சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நீதிபதிகளாக நியமனம் செய்ய ஆறு வழக்கறிஞர் கள் மற்றும் மூன்று மாவட்ட நீதிபதி களை, உச்சநீதிமன்ற கொலீஜியம் ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்திருக் கிறது.
பாஜக பிரமுகர் கௌரி
ஆறு வழக்கறிஞர்களில் பாஜக பிரமுகராக அறியப்படும் வழக்கறிஞர் விக்டோரியா கெளரி, உயர்நீதிமன்ற நீதிபதியாக பரிந்துரைக்கப்பட்டதற்கு கண்டனக் குரல்கள் எழுந்து வரு கின்றன. மேற்படி பரிந்துரை வந்த நாள் முதல் வழக்கறிஞர்கள் மத்தியிலிருந் தும், ஜனநாயக அமைப்புகளிலிருந்தும் விக்டோரியா கெளரியின் பரிந்துரை யை கொலீஜியம் திரும்பப்பெற வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்து வருகிறது. பாரதிய ஜனதா கட்சி மகளிர் அணி யின் தேசிய செயலாளராக இருந்தவர் விக்டோரியா கெளரி. சமூக வலைதள மான யூடியூபில் அவர், நாட்டின் சிறு பான்மை மக்களான கிறித்துவர்கள் குறித்தும், இஸ்லாமியர்கள் குறித்தும் வெறுப்பை தூண்டக் கூடிய வகையில் பேசிய மற்றும் பேட்டி கொடுத்த வீடி யோக்கள் ஆதாரங்களாக இருந்து வரு கின்றன. இந்நிலையில் நாட்டின் ஒற்று மைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் குந்தகம் ஏற்படுத்தக் கூடிய வகை யில் பேசியிருக்கும் இவரை உயர்நீதி மன்ற நீதிபதி பதவிக்கு கொலீஜியம் பரிந்துரை செய்திருப்பது அதிர்ச்சியளிக் கிறது. யூடியூபில் உள்ள அவரது பேச்சுகளும், பேட்டிகளும் பொது அமைதிக்கும் மக்கள் ஒற்றுமைக்கும் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய வகையில் உள்ளன. அரசியல் அமைப்புச் சட்டத்தின் மாண்புகளுக்கு எதிராக செயல்படக் கூடிய ஒருவராக மேற்படி வழக்கறிஞர் விக்டோரியா கெளரியின் நடவடிக்கைகள் இருக்கும் நிலையில் அவரது நியமனத்திற்கான பரிந்துரை யை திரும்பப் பெற வேண்டும் என்று அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் கோருகிறது.
ஒரு குடிமகனுக்கு இருக்கும் அடிப்படைக் கடமைகளாக அரசியல் அமைப்பு சட்டத்தின் ஷரத்து 51 ஹ (ந) மற்றும் (க) கூறியுள்ள படி ஒரு குடி மகனாக சமயம், மொழி, வட்டாரம் அல்லது பிரிவுகளுக்கிடையிலான வேற்றுமையைக் கடந்து இந்திய மக்களிடையே பொதுவான சகோதர நேயத்தையும், இணக்கத்தையும் உண்டாக்கவும், பெண்களின் மேன்மை யை தாழ்த்துகின்ற பழக்கங்களை துறக்கவும், மேலும் நமது கூட்டுக் கலாச்சாரத்தின் மிக உயர்ந்த பாரம்பரி யத்தை மதிக்கவும், பாதுகாக்கவும் வேண்டும் என்கிற ஒரு குடிமனுக்கு இருக்கக் கூடிய அடிப்படைக் கடமை களை மீறக்கூடிய வகையில் அவர் சமூக வலைதளங்களில் வெறுப்பு பேச்சை பிற சமூகத்தினர் குறித்து பரப்பி யுள்ளார். இப்படிப்பட்ட ஒருவரை உயர்நீதிமன்ற நீதிபதியாக பரிந்துரை செய்வது அரசியல் அமைப்புச் சட்டத்தின் மாண்புகளுக்கு எதிராக அமையும் என்று அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் கருதுகிறது.
அச்ச உணர்வு ஏற்படும்
மேலும் கொலீஜியத்தின் பரிந்துரை கள் குறித்தும் அதன் செயல்பாடுகள் குறித்தும் மத்திய சட்ட அமைச்சரிட மிருந்து எதிர்பாராத, தேவையற்ற விமர்சனங்கள் சமீப காலங்களில் எழுந்து வரும் நிலையில், கொலீஜி யத்தின் இப்படிப்பட்ட பரிந்துரைகள், நீதிபதிகள் நியமனங்கள் வெளிப் படைத் தன்மையற்றதாக உள்ளதாக வும், நீதித்துறையின் சுதந்திரமான செயல்பாட்டில் அரசின் தலையீடு இருப்பதாகவும் ஓர் அச்சஉணர்வை பொது மக்கள் மத்தியிலும், வழக்கறி ஞர்கள் மத்தியிலும் ஏற்படுத்தி விடும். உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் அரசியல் அமைப்புச் சட்டத்தின் பாதுகாவலர்களாக இருக்க அரசியல் அமைப்புச் சட்டம் அதிகாரம் வழங்கியிருக்கிறது. ஒரு நீதிபதி அரசியலமைப்புச் சட்டம் தனக்கு வரை யறுத்துள்ள கடமைகளை நிறை வேற்றும் போது எவ்வித அச்சமும் இல்லாமல், ஒரு சாராருக்கு ஆதார வாக இல்லாமல், எவர் ஒருவரின் செல்வாக்குக்கும் அடிபணியாமல், முன் கணிப்பு செய்யாமல் பாரபட்சமில்லாமல் நடுநிலையோடு நீதிபரிபாலனம் செய்வதன் மூலமே ஜனநாயகத்தில் நீதிபதிகள் சுதந்திரமாக செயல்படுகிறார்கள் என்கிற நம்பிக்கையை மக்களிடம் ஏற்படுத்த முடியும். சுதந்திரமான, நடுநிலையான நீதி மன்ற செயல்பாடு என்பது ஜனநாயகத்தின் இன்றியமையாத ஒரு கூறு ஆகும். அப்போது தான் சாதாரண மக்கள் அரசியலமைப்பு சட்டம் தங்களுக்கு வழங்கியுள்ள உரிமை கள் மீறப்படும் போது நீதிமன்றங்கள் மீது நம்பிக்கை வைத்து தங்கள் உரிமைகளை நிலை நாட்ட நீதிமன்றத்தை நாடி தைரிய மாக வருவார்கள்.
எப்படி நடுநிலையோடு செயல்படுவார்?
இந்த நாட்டின் மக்கள் ஒற்றுமை குறித்து கவலைப் படாமல், சிறுபான்மை மக்கள் குறித்து வெறுப்பு பேச்சை பேசிய ஒருவர் நாளை உயர்நீதிமன்ற நீதிபதியானால் அவர் முன்பு உரிமை மறுக்கப்பட்ட சிறுபான்மை மக்களின் வழக்கு வரும் போது அவர் எப்படி நடுநிலையோடு செயல்படு வார் என்கிற கேள்வி எழுகிறது. ஆக அரசியல் அமைப்புச் சட்டத்தின் பாது காவலர்களாக இருக்க வேண்டிய நீதிபதி களை கொலீஜியம் தேர்வு செய்யும் போது அரசியல் அமைப்புச் சட்டத்தின் கடமைகளை யும், உரிமைகளையும் பாதுகாக்க நடு நிலையோடு செயல்படும் நபர்களையே நன்கு ஆய்வு செய்து தேர்வு செய்யவேண்டும். வெளிப்படையாக. மத்தியில் ஆளக் கூடிய ஒரு கட்சியின் அமைப்பில் செயல்பட்டு வரும் ஒருவரை நீதிபதியாக பரிந்துரைப்பது நீதிபதிகள் நியமனத்தில் கொலீஜியத்தின் நம்பகத் தன்மையின் மீது மக்களுக்கு ஐயம் ஏற்பட வாய்ப்பாகும் என்று அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் கருது கிறது. வழக்கறிஞர் விக்டோரியா கெளரி அர சியல் சார்பு உள்ளவர் என்பதால் மட்டுமே அவர் குறித்த பரிந்துரை திரும்பப் பெறப்பட வேண்டும் என்பதல்ல. அவர் சார்ந்திருக் கும் கட்சியின் முக்கியப் பதவியில் இருப்ப தோடு, அக்கட்சியின் கொள்கையை மக்களி டம் கொண்டு செல்லும் பொறுப்பு வகிப்பவ ராகவும் இருக்கிறார். அதனுடைய வெளிப் பாடே அவரின் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு பேச்சு. எனவே, மக்கள் ஒற்றுமைக்கு எதிராக வெறுப்புப் பேச்சினைப் பரப்பக் கூடிய அவரை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக கொலீஜியம் பரிந்துரை செய்திருப்பதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் தமிழ் மாநிலக்குழு கொலீஜியத்தை கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.